FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, July 5, 2020

`9 பேரில் 6 பேர் மாற்றுத்திறனாளிகள்!' -கொரோனா ஊரடங்கால் பரிதவிக்கும் குடும்பம்


`எங்களுக்கு அரசு நிவாரண உதவி எல்லாம் செய்ய வேண்டாம். ஏதாவது ஒரு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தால் போதும். குடும்பத்தை மீட்டுக்கொண்டு வந்துவிடுவேன்' என்கிறார் தனலட்சுமி.

புதுக்கோட்டை காந்தி நகரில் வசிக்கும் ராஜூ - வசந்தா தம்பதிக்கு 5 மகள்கள், 2 மகன்கள் என மொத்தம் 7 பிள்ளைகள். இதில், 4 பெண்கள், 2 ஆண்கள் என 6 பேர் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். கடைக்குட்டிப் பெண்ணான தனலட்சுமி மட்டும் எந்தவித பிரச்னையும் இல்லாமல் பிறந்துவிட்டார்.

பல வருடங்களாகவே செருப்பு தைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்த ராஜூ தண்டுவட பாதிப்பால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முடங்கிவிட்டார். அதன்பின்பு, வீட்டு வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்த வசந்தாவும் நோய்வாய்ப்பட்டு வீட்டிலேயே முடங்கவே, படிப்பைப் பாதியில் நிறுத்திய கடைக்குட்டி தனலட்சுமி, அம்மா செய்துவந்த வேலையான வீட்டு வேலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அப்பா, அம்மாவுடன், மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளையும் காப்பாற்றி வந்தார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால், தற்போது தனலட்சுமிக்குச் சரிவர வீட்டுவேலை கூட கிடைக்கவில்லை என்பதால், சாப்பாட்டுக்கே சிரமப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அந்தக் குடும்பம். எப்படிக் குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறோம் என்று தெரியாமல் தனலட்சுமி பரிதவித்து வருகிறார்.

தனலட்சுமியிடம் பேசினோம், ``அப்பா, அம்மா வீட்டிலேயே முடங்கினதுக்கு அப்புறம் வேற வழியில்லாமல்தான் வீட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அக்கா எல்லாரும் ஆரம்பத்துல என்னோட வீட்டு வேலைக்கு வந்து ஒத்தாசையாக இருந்தாங்க. பக்கத்துல வந்து கூப்பிட்டு வேலை சொல்ல வேண்டியிருக்குன்னு சொல்லி, அந்த வீட்டு முதலாளி வேலைக்கு வேண்டாம்னு அவங்கள விரட்டி விட்டுட்டாரு.

அண்ணன்கள் ரெண்டு பேருக்கும் காது கேட்காது, வாய் பேச முடியாது. அதோட, ஒருத்தருக்கு குடல்வாழ்வு ஆபரேஷன், ஒரு அண்ணனுக்குக் கண்ணு தெரியாது. அவங்களாலயும் வேலைக்குப் போக முடியாத நிலை. ஓர் இடத்தில வீட்டு வேலை செஞ்சு கிடைக்கிற பணம் எங்க சாப்பாடு செலவுக்குக் கூட பத்தாது. அதற்கப்புறம் ரெண்டு, மூணு இடங்களில் வீட்டு வேலை செஞ்சு காப்பாத்திக்கிட்டு இருந்தேன்.

இப்போ, இந்தக் கொரோனா ஊரடங்கு உத்தரவால், வீட்டு வேலைகளும் கிடைக்கவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் இப்போ வேலைக்குப் போயிட்டு வர்றேன். அக்கா, அண்ணன்கள் என எல்லாருக்கும் திருமண வயசு கடந்திருச்சு. எல்லாருக்கும் எப்படியாவது திருமணம் பண்ணி வச்சிடணும்னுதான் ஆசை. ஆனா, முடியலை.

3-வது அக்காவ இரண்டாவது திருமணம் செஞ்சிக்கிறதாகச் சொல்லி வரன் வந்துச்சு, விசாரிச்சா நல்ல இடம்னு தெரிஞ்சது. உடனே, இந்த கஷ்டத்திலயும் வீட்டு வேலை செஞ்சு சேமிச்சு வச்சிருந்த பணத்தை வச்சு நல்லபடியாக திருமணம் பண்ணி வச்சிட்டேன். ஆனா, இப்போ வீட்டுவேலை இல்லாததால, ரொம்ப கஷ்டத்தில ஓடிக்கிட்டு இருக்கு குடும்பம். எங்களுக்கு அரசு நிவாரண உதவி எல்லாம் செய்ய வேண்டாம். கழிவறை கழுவுகிற வேலையாக இருந்தால்கூட அரசு ஏதாவது ஒரு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தால் போதும். குடும்பத்தை மீட்டுக்கொண்டு வந்துவிடுவேன்" என்கிறார் தன்னம்பிக்கையுடன்.

No comments:

Post a Comment