16.07.2020
கோவை: கோவை மாவட்டத்தில் கண்பார்வையற்ற நிலையில் தேர்வு எழுதிய 23 பேரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. கோவையில் 96.9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை மாவட்டம் தமிழக அளவில் தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கோவையில் கண்பார்வையற்றோர் 23 பேர் இந்த பொதுத் தேர்வை எழுதினர். இவர்கள் அனைவரும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் 35 பேர் தேர்வு எழுதினர். அதில் 29 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 36 பேர் தேர்வு எழுதினர். அதில் 32 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிற வகையில் ஊனம் அடைந்தோர் 30 பேர் தேர்வு எழுதினர். அதில் 29 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

No comments:
Post a Comment