FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, October 20, 2020

ஹத்ராஸ் சோகம் மறையும் முன்பு குஜராத்தில் அதிர்ச்சி : 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி பலாத்கார கொலை

18.10.2020
பனஸ்காந்தா,:குஜராத்தின் பனஸ்காந்தா அடுத்த டீசாவில் என்ற பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி (பேசும் திறனற்ற, காதுகேளாத மாற்றுத்திறனாளி) 2 தினங்களுக்கு முன்பு மாயமானார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் டான்டிவாடா போலீசார் சிறுமியின் சடலத்தை அதேபகுதியில் மீட்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘12 வயது சிறுமி முதலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். தற்போது, ​​இந்த வழக்கில் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிடிபட்ட குற்றவாளி சிறுமியின் உறவினர். குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை சம்பவ நாளில் தன்னுடன் பைக்கில் அழைத்துச் சென்றார். இந்த நபர் முதலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார், தொடர்ந்து விசாரணை நடக்கிறது’ என்றனர். இதுகுறித்து எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கூறுகையில், ‘குஜராத்தில் பாரத மாதாவின் கழுத்து அறுக்கப்பட்டுள்ளது. ஹத்ராஸ் விஷயத்தில் பிரதமர் மோடி ஏதாவது பேச வேண்டும் என்று நாங்கள் பலமுறை கூறினோம். ஆனால் அவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இப்போது குஜராத்தின் டான்டிவாடாவில் 12 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது எந்த வளர்ச்சி? இங்கே சட்டம்ஒழுங்கு கெட்டுள்ளது’ என்றார்.


No comments:

Post a Comment