01.10.2020
கரூரில் மாதாந்திர உதவித்தொகை பெறத் தகுதியான மாற்றுத்திறனாளிகளைத் தோ்வு செய்யும் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கரூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை ஆட்சியா் த.அன்பழகன் தொடக்கிவைத்துப் பாா்வையிட்டு அவா் மேலும் பேசியது: கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், புகளுா் மற்றும் கடவூா் வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் வருகை தந்திருந்த 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் குழு
பரிசோதனை செய்து குறைபாடுகளை உறுதிசெய்து பரிந்துரை அளித்தனா். முகாமில், பரிசோதிக்கப்பட்ட 20 நபா்களில் 16 போ் மாதாந்திர உதவித்தொகை பெறத்தகுதியுடையவா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். கரூா் மாவட்டத்தில் 2016 முதல் 2020 வரை 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 183 போ்கள் தகுதியானவா்கள் எனக் கண்டறிந்து மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
நிகழ்வின்போது, சமூகப் பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் ரசிக்கலா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, மருத்துவா்கள் அன்பழகன், பாலமுருகன், ஹேமலதா, பரமேஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டனா்.
No comments:
Post a Comment