10.10.2025
சென்னை: படிச்சி படிச்சி சொன்னேனே கேட்டீங்களா என கரூர் மக்களிடம் வீடியோ காலில் பேசிய போது தவெக தலைவர் விஜய் அழுது கொண்டே பேசினாராம். கரூர் சம்பவத்தை தொடர்ந்து கடந்த இரு தினங்களாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் வீடியோ காலில் பேசி வருகிறார்.
கரூர் பிரசாரக் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நடிகர் விஜய் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறினார். இதுவரை 41 குடும்பங்களில் 33 குடும்பங்களிடம் விஜய் வீடியோ காலில் பேசியிருக்கிறார்.
அவர் தங்களிடம் என்ன பேசினார் என்பதை அந்த மக்கள் ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவரின மனைவி சங்கவியிடம், விஜய், "என்றும் உங்களுக்கு ஆறுதலாக இருப்பேன். உங்களை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறேன். அது கிடைத்ததும் வந்து சந்திக்கிறேன்" என்றாராம்.
வாய் பேச முடியாத குழந்தை
அது போல் சம்பவத்தில் பலியான காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தையின் தாய், ஊடகங்களிடம் கூறுகையில், "என் பாப்பாவுக்கு வாய் பேச முடியாது, காது கேட்காது என நான் சொல்லும் போதே விஜய் அழுதுவிட்டார். ஏன் சார் எங்களை பார்க்க வரவில்லை? என கேட்ட போது "அவர் கூடிய சீக்கிரம் வருவதாக" தெரிவித்தார். மேலும் எங்களுக்கு துணையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அறிவுறுத்தினேனேம்மா
மேலும் விஜய் எங்களிடம் பேசுகையில், "நான்தான் கூட்ட நெரிசலில் குழந்தைகளை தூக்கிட்டு வராதீங்கன்னு சொன்னேனே, நீங்க எங்கம்மா அதை கேட்டீங்க" என ஆதங்கப்பட்டார். அதற்கு நான், "இப்படி நடக்கும் என யாருக்கு சார் தெரியும். எப்படி சார் உங்களை பார்க்காமல் இருக்க முடியும். எங்கள் வீட்டில் நாங்கள் எல்லாம் உங்களுக்கு ரசிகர்கள்" என சொன்னேன். இவ்வாறு அந்த பெண் தெரிவித்தார்.
20 நிமிடங்கள்
விஜய் பாதிக்கப்பட்டவர்களிடம் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக பேசியுள்ளாராம். எத்தனை ஆறுதல் சொன்னாலும் உங்கள் இழப்புகளை என்னால் மீட்டு கொண்டு வர முடியாது என்றும் பலரிடம் அழுதிருக்கிறாராம்.
41 பேர் பலி
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழாக வெற்றி கழகத்தின் பொதுக் கூட்டத்தில் செப்டம்பர் 27 அன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சுமார் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

வீடியோ காலில் விஜய்
இந்தச் சம்பவம் நடந்த பத்து நாட்களுக்குப் பிறகு, பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்த விமர்சனங்களுக்குப் பிறகு, த.வெ.க தலைவர் விஜய் , பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்காமல், அக்டோபர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் வீடியோ கால்கள் மூலம் பேசத் தொடங்கினார்.
அண்ணனாக இருப்பேன்
வீடியோ காலில் விஜய், நடந்த சம்பவத்திற்காக தனது வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்தார். இது ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறினார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களிடம், "நான் உங்களுடன் இருக்கிறேன், உங்களுக்குத் துணையாக நிற்பேன்" என்று உறுதியளித்தார். ஒரு குடும்பத்தில், இறந்தவரின் சகோதரியிடம், "நான் உங்களுக்கு அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன்" என்று ஆறுதல் கூறினார். இன்னொரு குடும்பப் பெண்ணிடம் "நான் உங்கள் மகன் போல" என்றும் ஆறுதல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
நேரில் வரேன்
சட்டச் சிக்கல்கள் மற்றும் "சில சிரமங்கள்" காரணமாக தற்போதைக்கு நேரில் வர முடியவில்லை என்றும், விரைவில் அனுமதி பெற்று வந்து குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
ரெக்கார்டு செய்ய வேண்டாம்
அரசியல் காரணங்களுக்காக இந்த உரையாடல்களில் எந்தவிதமான புகைப்படங்களையோ அல்லது வீடியோக்களையோ பதிவு செய்ய வேண்டாம் என்று குடும்பத்தினரிடம் விஜயின் குழுவினர் கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியைச் சேர்ந்தவர் மட்டுமே வீடியோவை பதிவு செய்துள்ளார்.
.png)
No comments:
Post a Comment