FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, October 12, 2025

மாற்றுத் திறனாளிகள் வாங்கும் காருக்கான ஜிஎஸ்டி சலுகை ரத்து - அன்புமணி கண்டனம்


12.10.2025 
சென்னை: மாற்றுத் திறனாளிகள் கார் வாங்க அளிக்கப்பட்டு வந்த 10% ஜிஎஸ்டி சலுகை ரத்து செய்யப்பட்டதை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள வலைதள பதிவில்: "உணவுப் பொருள்கள் தொடங்கி வாகனங்கள் வரை பெரும்பான்மையான பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதைக் காரணம் காட்டி மாற்றுத்திறனாளிகள் மகிழுந்து வாங்க வழங்கப்பட்டு வந்த 10% வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தமளிக்கிறது.

ஜிஎஸ்டி வரிச் சீர்திருத்தத்திற்கு முன்பாக அனைத்து மகிழுந்துகளுக்கும் 28% வரி வசூலிக்கப்பட்டு வந்தது. மாற்றுத் திறனாளிகள் மகிழுந்து வாங்கும் போது அவர்களுக்கு 10% வரிச் சலுகை வழங்கப்பட்டு, 18% மட்டுமே வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது சிறிய மகிழுந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், பெரிய மகிழுந்துகளுக்கான வரி 40% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு பிறகு மாற்றுத் திறனாளிகள் வாங்கும் சிறிய மகிழுந்துகளுக்கான 10% வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் பிரிவினருமே சிறிய மகிழுந்துகளுக்கு 18% வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல.

மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை அளிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களுக்கு 10% வரிச் சலுகை வழங்கப்பட்டு வந்தது. பொதுவாகவே மகிழுந்துகளுக்கான வரிகள் குறைக்கப்பட்டதைக் காரணம் காட்டி வரிச் சலுகையை ரத்து செய்வது அநீதியாகும். மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த இந்த வரிச் சலுகை தான் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளும் மகிழுந்து வாங்குவதற்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. இந்த சலுகை நிறுத்தப்பட்டால் அவர்கள் மகிழுந்து வாங்குவதற்கான வாய்ப்புகள் தடைபட்டு போய்விடும்.

எனவே, மாற்றுத் திறனாளிகள் மகிழுந்து வாங்க அளிக்கப்பட்டு வந்த 10% ஜிஎஸ்டி சலுகை ரத்து செய்யப்பட்டதை கைவிட வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு 8% ஜிஎஸ்டி விதிப்பில் மகிழுந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.



No comments:

Post a Comment