FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, October 11, 2025

மாற்றுத்திறனாளிகள் கார் வாங்கினால் 10% ஜி.எஸ்.டி வரி கிடையாது; பழைய முறையே அமல்படுத்த நிர்மலா சீதாராமனுக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம்



09.10.2025 
மாற்றுத்திறனாளிகள் கார் வாங்கினால் 10% ஜிஎஸ்டி வரி கிடையாது பழைய முறையே அமல்படுத்த வேண்டும் என நிர்மலா சீதாராமனுக்கு எம்.பி. ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் கார் வாங்கினால் 10% ஜிஎஸ்டி வரி கிடையாது பழைய முறையே அமல்படுத்த வேண்டும் என நிர்மலா சீதாராமனுக்கு எம் பி ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார். கார் வாங்குவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 10% ஜிஎஸ்டி வரி சலுகையைத் தொடர வேண்டும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தக் கடிதத்தில், மாற்றுத் திறனாளிகள் சிறு ரக கார் வாங்குவதற்கு 10% ஜிஎஸ்டி வரி சலுகை வழங்கப்பட்டு வந்தது. 28% ஜிஎஸ்டி வரி இருந்தபோது அவர்களுக்கு 18% விதிக்கப்பட்டது. தற்போது ஜிஎஸ்டி வரிகளில் மாற்றம் செய்யப்பட்டு சிறு ரக கார்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் செய்யப்பட்டதற்குப் பின்பு மாற்று திறனாளிகளுக்கு வரி சலுகை கொடுக்கத் தேவையில்லை என நிதி அமைச்சகம் கூறிவிட்டதாக ஒன்றிய கனரகத் தொழில்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் பெருமைப்பட்டுக்கொள்ளும் நிலையில் அந்த வரிக்குறைப்பு மாற்றுத் திறனாளிகளுக்குக் கிடையாது எனச் சொல்வது எவ்விதத்திலும் நியாயமல்ல. எனவே, ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்குப் பிறகும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10% ஜிஎஸ்டி வரி சலுகையை வழங்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் வரி சலுகையானது வெறுமனே நிதிச் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையல்ல, அது அவர்களின் கண்ணியத்தைக் காப்பாற்றி மற்றவர்களுக்கு இணையாக அவர்கள் செயல்படுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகும். எனவே, மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் மாற்றுத் திறனாளிகள் சிறிய ரக கார் வாங்குவதற்கு வழங்கப்பட்டுவந்த 10% ஜிஎஸ்டி வரிச் சலுகையை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.



No comments:

Post a Comment