FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, February 10, 2019

நிவேதாவின் ஒரிஜினல் `பேரன்பு' ஸ்டோரி!


மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் அன்றாட நிகழ்வுகளைத் தத்ரூபமாக `பேரன்பு' படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் ராம்.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களுள் சிலர், நாம் எதிர்பார்க்காத நேரத்தில் நமக்கு பேரன்பைக் கொடுத்து நம்முடைய வாழ்வின் அடுத்தகட்ட நகர்தலுக்கான நம்பிக்கையைக் கொடுப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் உண்மையில் பேரன்பானவர்கள்! நிஜத்தில் `பேரன்பினால்' அழகான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் நிவேதாவின் வாழ்க்கையைப் பற்றித்தான் இங்கே பேசுகிறார் அவர் அம்மா வனிதா.

``நிவேதாவுடைய ஒன்றரை வயசுல அவளுக்குத் திடீர்னு காய்ச்சல் வந்துச்சு. அதுவும் கையே வைக்க முடியாத அளவுக்கு பயங்கர காய்ச்சல். அலறியடிச்சுகிட்டு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனோம். அந்தக் காய்ச்சலுக்கு அப்பறம்தான் நிவேதா உடம்புல சில மாற்றங்கள் வர ஆரம்பிச்சது. அவளுக்கு என்னப் பிரச்னைனே தெரியாம பல ஆஸ்பத்திரிகளுக்குக் கூட்டிட்டு போனோம். கடைசியா அவ பன்மெய்ப்புல சவால் கொண்ட குழந்தைனு (Multiple disabled child) கண்டுபிடிச்சு சொன்னாங்க'' என்றவரின் வார்த்தைகளின் அந்நாளின் வலி பிரதிபலிக்கிறது.

``அழுகையைத் தவிர வேற எதுவும் எனக்கும் என் கணவருக்கும் ஆறுதலா இல்லை. கண்ணீர் வற்றிப் போற அளவுக்கு அழுது தீர்த்தோம். அதுக்கப்புறம்தான் உண்மை உறைச்சது. நாங்கதான் அவளோட உலகம். அவளுக்குக் கண் தெரியும்... காது கேட்காது, வாய் பேச வராது, நடக்கும் போது பேலன்ஸ் குறைவாக இருக்கும். எந்நேரமும் அவ பக்கத்திலேயே இருக்க ஆரம்பிச்சேன். ஸ்கூல்ல சேக்கனும்னு நினைச்சப்பதான் பிரச்னையே ஆரம்பிச்சது. நார்மல் ஸ்கூல்ல அவள எடுத்துக்கல. காது கேளாதோர் பள்ளியிலயும் சேர்த்துக்கல. வீட்ல அவளுக்குத் தெரிஞ்ச வார்த்தைகள மட்டும் நாக்க மடக்காம பேசி எங்களுக்கு புரிய வெச்சுட்டு இருந்தா.

அவளை உன்னிப்பா கவனிக்கிறப்பதான் ஒரு விஷயம் புரிஞ்சது. நிவேதா மூளை பயங்கர ஷார்ப். சொன்னதை அப்படியே கப்புனு பிடிச்சுகிற கற்பூர மூளை. ஆனா அவ மூளையோட கட்டளைகளை ஏத்துகிடுற அளவுக்கு அவளோட கை கால்கள் ஒத்துழைக்கல. அதை ஒரு சாக்கா நிவேதா எடுத்துக்கலை. வீட்ல இருந்தப்படியே கைவினைப் பொருள்கள் செய்ய கத்துக்கிட்டா. அதே மாதிரி சைய்ன் லாங்குவேஜ் கத்துக்க ஆரம்பிச்சா. செல்போன் கவர், நெக்லஸ், கம்மல்னு அவளே நிறைய பொருள்கள் செய்றா. இந்த வருடம் ஆனந்த விகடன் நம்பிக்கை விருது விழாவில் மேடை ஏற்றப்பட்ட நிவேதாவுக்கு ஒலித்த கரகோஷங்கள் அடங்க வெகு நேரமானது.'' என்றபடி பெருமையுடன் தன் மகளைப் பார்க்கிறார் வனிதா.

பீரியட்ஸ்... நார்மல் பெண்களே உடலளவிலும் மனதளவிலும் துவண்டு போகும் ஒரு தருணம். நிவேதா எப்படிச் சமாளிக்கிறார் என்று வனிதாவிடம் கேட்டோம்'' சொன்னா நம்ப மாட்டீங்க. நிவேதா பொறுத்தவரைக்கும் பீரியட்ஸ் பிரச்னைகள் எதுவும் நான் எதிர்கொண்டது இல்லை. அவளுக்கு பீரியட்ஸ் வர தேதிய அவளே சரியா குறிச்சு வெச்சுப்பா. அதே மாதிரி அந்தச் சமயத்துல, டார்க் கலர் ட்ரஸ்தான் செலக்ட் பண்ணிப்பா. என்கிட்ட கூட எதையும் வெளிக்காட்டிக்க கூடாதுனு நெனைப்பா. என் பொண்ணு செய்ற விஷயங்கள வெளிய சொன்னா எல்லாரும் ஆச்சர்யமா பாப்பாங்க. ஏன்னா, மருத்துவச் சான்றின்படி, நிவேதா நூறு சதவிகிதம் ஊனமுற்ற பெண். அப்படி இருந்தும் இவ்ளோ தூரம் தெளிவா இருக்கானா நிச்சயம் அதுக்கு அவளோட தன்னம்பிக்கைதான் காரணம்.

அதே மாதிரி அப்யூஸ் பத்தியும் என் பொண்ணுக்கு சைன் லாங்குவேஜ்ல சொல்லிக் கொடுத்திருக்கேன். பஸ்ல டிராவல் பண்ணும்போது நிறைய பாலியல் ரீதியான பிரச்னைகள்ஏற்படும். மாற்றுத்திறனாளி குழந்தைங்கன்னா அந்தப் பிரச்னையை வெளியில் சொல்ல முடியாது... அவங்களால் எந்தப் பிரச்னையும் வராதுங்குற தைரியத்துல பஸ்ல பாலியல் ரீதியான சீண்டல்களைச் சிலர் செய்வாங்க. அந்த மாதிரி சமயத்துல பாப்பா என்கிட்டச் சொல்லிடுவா. உதாரணத்துக்கு, இப்போ பஸ்ல டிராவல் பண்ணும்போது யாராவது பாப்பாவைப் பார்த்துட்டே இருந்தா, அம்மா அவங்க என்னைப் பார்க்குறாங்க.. என் முகத்தை மறைச்சு நில்லுங்கன்னு என்கிட்ட சொல்லிடுவா. அந்த மாதிரியான விஷயங்களில் நிவேதா ரொம்பவே கவனமா இருப்பா. ரொம்ப அன்பான பொண்ணும்மா. தன்னைத் தெரிஞ்சவங்ககிட்ட அக்கறையோட நடந்துப்பா. அன்புக்காக ஏங்குற பொண்ணு. என் மூலமா அவளுக்கு அப்படி ஓர் அன்பு கிடைக்கணும்னு கடவுள் நினைச்சிருக்கார் போல...'' என்கிறவர் ஒருசில நிமிடங்களுக்குப் பிறகு தொடர்ந்தார்.

``எல்லோரையும் போல ஒரு திருமண வாழ்க்கையை நாமளும் வாழணுங்குற எண்ணம் என் பொண்ணுக்கு இருக்கு. நிவேதாவால் பேச முடியாததுனால வாய் பேச முடியாத, காது கேட்காத பையனைத்தான் திருமணம் செஞ்சுப்பேன்னு சொல்றா. ஏன்னா, அவளால் பேச முடியாதுங்குறதுனால சைன் லாங்குவேஜ் மூலமாப் பேசுறவங்க இருந்த கம்பர்டபுளா இருக்கும்னு நினைக்கிறா. அவளைப் பொறுத்தவரைக்கும் அவ பின்னாடி நின்னு பேசினா பிடிக்காது. ரொம்பக் கோபப்படுவா. ஏன்னா அவளுக்கு அது கேட்காது இல்லியா... அதனாலேயே ஏதாவது சொன்னாகூட அவ முன்னாடி நின்னுதான் சொல்லுவேன். இந்தக் காரணத்துக்காகவும் சைன் லாங்குவேஜ் தெரிஞ்ச பையனா இருந்தா நல்லதுனு நினைக்கிறார். நிறைய வரன் வருது. ஆனா எதுவும் அவ மனசுக்கும் எங்க மனசுக்கும் பிடிச்ச மாதிரி இல்லை. நிச்சயம் பொறுப்பான ஒரு பையன் கையில அவளை ஒப்படைக்கிற வரைக்கும் என் தேடல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்'' என்று மகள் சார்பாகப் பேசுகிறார் இந்தப் பேரன்புக்காரி.

வெற்றிக்கு கிடைப்பது பரிசு... : தோல்விக்கோ அதுதான் பாடம்!

03.02.2019
இன்றைய இளைஞர்களுக்கு, வாழ்க்கையில் ஒரு சிறிய பிரச்னை என்றால் கூட அதை எதிர்கொள்ள தெரிவதில்லை. அதிலும், சிலர் அப்பிரச்னையில் இருந்து மீள முடியாமல், தற்கொலையே தீர்வாக நினைக்கின்றனர்.'வாழ்க்கையில் நாம் சந்திக்கும், தடைகள்தான் வெற்றிக்கான முதல் படி... நீ சந்திக்கும் தோல்விதான் உன்னை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும்' என, நம்பிக்கையூட்டுகிறார் பிரசன்ன குமார்,43.சரி யார் இவர்... அப்படி என்ன சாதனை புரிந்திருக்கிறார் என, புருவம் உயர்த்துபவர்களுக்கு, இதோ அவருடைய சாதனை பட்டியலில் பதில் அளிக்கிறது.பொள்ளாச்சி ஆனைமலையில் வசித்து வரும் பிரசன்னகுமார், பிறவியில் இருந்தே, காது கேளாத வாய் பேச முடியாதவர். சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் கொண்ட இவர், இயற்கை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக, பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார்.

மலேசியா பாராட்டு

மலேசிய அரசாங்கம் இவருக்கு, விருது கொடுத்த பாராட்டியதோடு, ஒவ்வொரு ஆண்டும் கோலாலம்பூரில் இவரது ஓவியங்களை காட்சிக்கு வைக்க அனுமதியும் அளித்துள்ளது. இலை, தென்னை, பனை ஓலை, கூலாங்கற்கள் கொண்டு பல்வேறு படைப்புகளையும் உருவாக்கியுள்ளார். இவர் ஒரு நடனம் மற்றும் மோனோ ஆக்டிங் கலைஞர் என்பது கூடுதல் தகவல். இசையை கேட்கதான் முடியாது; ஆனால் அதை மனதில் உணர்ந்து, எதிரே நடன ஆசிரியரின் கை அசைவுக்கு ஏற்ப நடனமாடுவதில் இவர் சிறந்தவர்.
இவரால், மிமிக்ரி செய்ய முடியாதுதான்; ஆனால் தனி ஒரு நபராக மோனோ ஆக்டிங்கில், ராமாயண கதையை தத்ரூபமாக நடித்து காட்டி அரங்கத்தையே அதிர வைத்தார்.வாய் பேச முடியாதுதான். ஆனால் இவர் எடுத்த புகைப்படங்கள் பேசுகின்றன, இயற்கையின் உன்னதத்தை.குறும்படம் எடுப்பதிலும் வல்லவரான இவர், எடுத்த குறும்படம் ஒன்று, கோவையில் நடந்த திரைப்பட விழாவில் இரண்டாம் பரிசு பெற்றது.எல்லாம் கிடைத்தும் வாழ்க்கையை வாழ தெரியாமல், முடங்கி கிடக்கும் இளைஞர்களே... இவரை பார்த்து இந்த நொடியில் முடிவெடுங்கள்...

உங்களுக்கான லட்சியம் என்னவென்று!இவரால், மிமிக்ரி செய்ய முடியாதுதான்; ஆனால் தனி ஒரு நபராக மோனோ ஆக்டிங்கில், ராமாயண கதையை தத்ரூபமாக நடித்து காட்டி அரங்கத்தையே அதிர வைத்தார்.வாய் பேச முடியாதுதான். ஆனால் இவர் எடுத்த புகைப்படங்கள் பேசுகின்றன, இயற்கையின் உன்னதத்தை!

வெற்றி புகழ் தரும்... தோல்வி பாடம் தரும்!

சைகை மொழியில் பிரசன்னகுமார் நம்மிடம், ''இந்தியாவின் பாரம்பரியத்தை உலகுக்கு, அறிய செய்ய வேண்டும் என்பதற்காக, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். எந்த ஒரு நிலையிலும் தோல்வியடைந்து விட்டேன் என்பதை ஒப்புக்கொள்ளாதீர்கள். வெற்றி புகழை மட்டுமே தரும்; தோல்விதான் பாடம் கற்பிக்கும்,'' என்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

10.02.2019
ஓசூர்: ஓசூர் அருகே, தொரப்பள்ளி அக்ரஹாரத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடக்கவுள்ளது. இதுகுறித்து, ஓசூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கோட்டம், மத்திகிரிக்கு உட்பட்ட தொரப்பள்ளி அக்ரஹாரத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம், வரும், 12 காலை, 10:00 மணிக்கு, ஆர்.டி.ஓ., விமல்ராஜ் தலைமையில் நடக்க உள்ளது. இதில், மூன்று சக்கர வாகனம், காது கேளாதோர் இயந்திரம், இலவச பஸ் பாஸ், இருசக்கர நாற்காலி, செயற்கை கால் போன்றவற்றை பெற, அந்தந்த வி.ஏ.ஓ.,க்களிடம் கோரிக்கை மனு வழங்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

ஓவியம், நடனம், விளையாட்டில் அசத்தல் இவர்கள் சிந்தனையை மாற்றும் திறனாளிகள்!: நம்பிக்கையூட்டும் அரசு பள்ளி

10.02.2019
சேலம்: சேலம் அருகே அரசுப்பள்ளியில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்கள் ஓவியம், நடனம், விளையாட்டு என்று பல்வேறு துறைகளில் சாதனை படைப்பது கவனம் ஈர்த்துள்ளது. உடல் குறைபாடு என்பது மனிதனின் வெற்றி பயணத்திற்கு ஒரு தடையல்ல. அதுவும் எங்களுக்கான அடையாளம் தான். கிராமங்களில் ஏராளமான மாற்றுத்திறன் சாதனையாளர்கள் உள்ளனர். அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று கூறுவதை விட, தங்கள் மீதான பிறரின் சிந்தனையை மாற்றும் திறனாளிகள் என்றே கூறவேண்டும். அந்த வகையில் ஓவியம், நடனம், விளையாட்டு என்று எங்களால் முடிந்த சாதனைகளை படைத்து வருகிறோம் என்று ெநகிழ்கின்றனர் ேசலம் அருேகயுள்ள வலசையூர் அரசுப்பள்ளி மாணவர்கள். அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள 21 ஒன்றியங்களில் 300 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 580க்கும் அதிகமான மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் சேலம் வலசையூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள், கலை, ஓவியம், விளையாட்டு என அசத்தி வருகின்றனர். கண் பார்வையற்ற 6 பேர், காதுகேளாதோர் 9 பேர், வாய் பேசமுடியாத, காது கேளாத மற்றும் கைகளை இழந்த ஒருவர், உள்பட 17 மாற்றுத்திறனாளிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களில், 2 பேர் எஸ்எஸ்எல்சி, 3 பேர் பிளஸ் 1 மற்றும் 8 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். இப்பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் ராஜா என்பவர், இரு கைகளும் செயலிழந்த நிலையில், வாய் பேசமுடியாத, காது கேட்கமுடியாத துயரத்தை கொண்டுள்ளார். ஆனால், திறமைக்கு இதெல்லாம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், தனது இரு கால்களால் ஓவியங்களை தீட்டி அசத்துகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் இப்பள்ளியில் சேர்ந்துள்ளார். விரைவில், மாநில அளவிலான ஓவியப்போட்டியில் பங்கேற்கவுள்ள இவரின் திறமையை பாராட்டி, மாவட்ட ஆட்சியர் ரோகிணி பரிசும் வழங்கியுள்ளார். சக மாணவர்களுடன் ஓட்டத்திலும் முந்தும் இவர், பயிற்சியாளர்களே தடுமாறும் பத்மாசனத்தை அசால்ட்டாக செய்து முடிக்கிறார்.

மாற்றுத்திறன் மாணவர்கள் சாதிக்க, விளையாட்டு ஒன்றும் விதிவிலக்கல்ல என மார்தட்டுகிறார், இதே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கு மாணவர் கவுதம். பார்வையற்றவரான இவர், சத்தமில்லாமல் ஜூடோ போட்டியில் சாதிக்கிறார். கடந்த மாதம் உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்ற இவர், வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். கலைத்துறையில் சாதிக்க விரும்பும் கேசவமூர்த்தி நடனத்தில், வியக்க வைக்கிறார். பிளஸ் 2 படித்து வரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில், நடனமாடி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். இதேபோல், பிளஸ் 2 படிக்கும் காதுகேளாத, வாய்பேச முடியாத மாணவன் மகேந்திரன் கம்யூட்டரை கையாள்வதில், ஆசிரியரையே மிரள வைக்கிறார். 9ம் வகுப்பு படிக்கும் பிரேம்குமார் என்பவரும், ஓவியத்தில் தனித்திறனை கொண்டு சிறந்து விளங்குகிறார். இதுகுறித்து மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு ஆசிரியர் அமிர்தவள்ளி கூறுகையில், ‘‘கடந்த 10 வருடமாக இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலவழிகளை காட்டும் தூண்டுகோலாக இருந்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளை தனிமைப்படுத்த கூடாது என்ற எண்ணத்தை கொண்டுள்ள அவர்கள், ஒன்றாக விளையாட்டு, உணவு பரிமாற்றம் என ஊக்கப்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகின்றனர். இப் பள்ளியை விட்டு வெளியே சென்ற பலர் எம்.காம்., பி.காம்., மற்றும் பாலிநுட்பம் கல்லூரிகளில் படித்து, நிரந்தர பணியில் உள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் முயற்சிகளுக்கு துணையாக நின்றால், நாளைய சாதனையாளர்களாக மிளிர்கின்றனர். இந்த எண்ணம் அனைவருக்கும் இயல்பாக ஏற்பட வேண்டும்,’’ என்றார்.

கூடுதல் உபகரணங்கள் தேவை
மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்பட்டு வரும் பல பள்ளிகளில், தனியாக ஆய்வக வசதிகள் இல்லை. பாதுகாப்பற்ற கட்டிடங்களில் இப்பிரிவு செயல்பட்டு வருவதால், கற்றல் உபகரணங்களுக்கு உத்திரவாதம் இல்லாத நிலை காணப்படுகிறது. இதேபோல், பார்வையற்ற மாணவர்களுக்கு நிறைய கற்றல் உபகரணங்கள் உள்ளன. ஆனால், காதுகேளாதவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒருசில கருவிகள், அந்த மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, கூடுதலாக உபகரணங்களை வழங்க வேண்டும் என்பதும் மாணவர்களின் எதிர்பார்ப்பு.

காதுகேளாதோருக்கான அகில இந்திய தடகளம் - தமிழக வீராங்கனை குரு ஜோதி புதிய சாதனை


காதுகேளாதோருக்கான அகில இந்திய தடகள போட்டி (14, 16, 18 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோர்) சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை குரு ஜோதி 3.92 மீட்டர் தூரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

Sound Amplifier, Live Transcribe: New Apps From Google to Help hearing impaired individuals

07.02.2019
The technology that we surround ourselves with is often designed for our advantage as a human being. We use various technologies in order to make our lives easier but, despite the numerous innovations, there are very few technologies tailored for consumers with disabilities. Technology should also be used to cater to consumers with disabilities in order to fill the gap that has been caused by disadvantages in physicality.

Google has introduced two new apps for Android keeping the same approach towards technology. The apps are designed to help deaf and hard-of-hearing people in their social interactions.

Live Transcribe


Live Transcribe is a live transcription tool for deaf and hard-of-hearing people. The app helps in making everyday conversations more accessible by converting real-world speech, which the app carries through the phone’s microphone, into captions in real-time. Google has made progress with its speech recognition and the app uses that to help people who are hard of hearing in order to provide them with captions in real time.

Live Transcribe supports over 70 languages and dialects. The other advantages of the app, apart from live transcription, is its ability to enable a two-way conversation via a type-back keyboard for users who cannot speak. The app also connects with an external microphone in order to improve transcription accuracy. Live Transcription is currently available in early access limited beta through the Play Store and will come pre-installed in Pixel 3 devices. In order to use Live Transcribe, users will have to enable it in Accessibility Settings, then start Live Transcribe from the accessibility button on the navigation bar.

Sound Amplifier

Sound Amplifier was announced in Google I/O 2018. The app works by enhancing quiet, while not over-boosting loud sounds. The app lets users customize sound enhancement settings and apply noise reduction to minimize distracting background noise. The app comes in handy at places or situations with loud background noise like airports or noisy public areas.

Sound Amplifier is available on the Play Store and supports Android 9 Pie, and comes pre-installed on Pixel 3.

Kunal brings laurels in games for hearing impaired

Amritsar, February 9

A hearing impaired student of DAV Red Cross School for Special Children, Kunal Sharma, brought laurels to the institution and his parents by winning gold medal in the long jump in the National Junior and Sub-Junior Games.

These games were held in Chennai last week. The tournaments were organised by the All India Sports Council for hearing impaired. Players from 23 states participated in the games. The star performer was selected for national games after winning silver medal in the long jump and bronze in the 200 metre race in Punjab State Games for hearing impaired held in Patiala in December 2018.


Police home guard rapes deaf and mute woman, thrashes her minor son in Uttar Pradesh

06.02.2019
Kanpur: Police in Kanpur Dehat district of Uttar Pradesh has registered a complaint of rape against a police home guard. The accused allegedly raped a 35-year-old deaf and mute woman under Gajner police station limits on January 29. However, the case came to light only after the woman's kin lodged an official complaint with the police on Monday.

In his complaint, the rape survivor's brother has alleged that the accused barged into the verandah of the house where she was asleep and raped her. Sharif, the accused home guard even thrashed the woman's 13-year-old minor son when he rushed to his mother's rescue, claims the complainant.

Police officials familiar with the matter said that the woman upon gaining consciousness explained her ordeal to her neighbours and relatives through sign language. Based on a complaint by her brother, police registered an FIR against the accused under section 376 of the Indian Penal Code (IPC).

The accused police home guard, Sharif, has been arrested and the woman has been sent for medical examination, Station House Officer (SHO), Gajner, Shashibhushan Mishra told Times of India. The officer also confirmed to the national daily that the accused indeed works as a police home guard.

A similar incident had come to light from Gwalior in Madhya Pradesh last year where a 25-year-old deaf and mute girl was raped at a facility run by a foreign-funded NGO in September of last year. Following the incident, authorities at the facility were also accused of forcing the woman to abort the child conceived as a result of the rape.

World deaf champ wins #VicOpen spot

05.02.2019
Diksha Dagar, a profoundly deaf Indian teenager who has taken the amateur golf world on the subcontinent by storm, has qualified to play the ISPS Handa Vic Open this week.

Dagar, 18, who recently turned professional and earned her playing rights on the Ladies European Tour, shot 69 at Sanctuary Lakes on the western fringe Melbourne to win one of the last spots in the field.

It will be by far the biggest professional event she has played in.

“I’m not sure if knows fully what she’s done and what she’s playing in yet,’’ said her father, Narinder Dagar today.

“But she’s aware that she’ll be playing against some of the best in the world, and she thinks that she deserves to be there. She’s a very confident girl.’’

Diksha Dagar is on her first visit to Australia. Profoundly deaf from birth, the young woman from the village of Chappar, in Haryana state not far from the capital Delhi, functions with coclear implants and a dash of lip-reading and sign language.

Her father caddies for her and translates as well. “She doesn’t have a coach or a mind coach, she doesn’t need anything else,’’ said Narinder Dagar today. “I’m with her most of the time. Of course, communication is an issue but we have what we have, even though nothing can really replace full hearing.

“She has the hearing instruments that she uses and they are of some help, and she understands sign language and does some lip reading.”

The left-handed Dagar did not come out of nowhere in golf terms. She has been the No. 1 amateur in India for the past four years, represented her nation at the Asian Games last year and won the Singapore Ladies Amateur Championship. She won the world deaf championship in Ireland in 2018.

“She’s venturing out into the world,’’ said Narinder Dagar. “It’s not just about India now. Our aim is to play in the ALPG (Australian tour) more permanently. We want to be around this place. The people have been fantastic to us and that’s been so much help to Diksha as we’ve gone around.”

Top Australian amateur Stephanie Bunque matched Dagar’s 69 to grab the second spot in the Open field from Sanctuary Lakes.

Frenchwoman Agathe Sauzon shot a 69 to take the qualifying spot from Barwon Heads Golf Club, just across the way from 13th Beach. Sauzon is a Ladies European Tour player.

At Curlewis, the four spots available in the men's field were filled by Andrew Pitt (Victoria), James Gibbelini (Queensland), Ruben Lal (Victoria) and Jamie Hook (NSW) who all shot 68s.

At Portarlington, the three spots on offer were picked up by Victorian Andrew Kelly, WA's Brady Watt and Canadian player Austin Connelly.