FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Sunday, February 10, 2019

நிவேதாவின் ஒரிஜினல் `பேரன்பு' ஸ்டோரி!


மாற்றுத்திறனாளி குழந்தைகள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் அன்றாட நிகழ்வுகளைத் தத்ரூபமாக `பேரன்பு' படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் ராம்.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களுள் சிலர், நாம் எதிர்பார்க்காத நேரத்தில் நமக்கு பேரன்பைக் கொடுத்து நம்முடைய வாழ்வின் அடுத்தகட்ட நகர்தலுக்கான நம்பிக்கையைக் கொடுப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் உண்மையில் பேரன்பானவர்கள்! நிஜத்தில் `பேரன்பினால்' அழகான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் நிவேதாவின் வாழ்க்கையைப் பற்றித்தான் இங்கே பேசுகிறார் அவர் அம்மா வனிதா.

``நிவேதாவுடைய ஒன்றரை வயசுல அவளுக்குத் திடீர்னு காய்ச்சல் வந்துச்சு. அதுவும் கையே வைக்க முடியாத அளவுக்கு பயங்கர காய்ச்சல். அலறியடிச்சுகிட்டு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனோம். அந்தக் காய்ச்சலுக்கு அப்பறம்தான் நிவேதா உடம்புல சில மாற்றங்கள் வர ஆரம்பிச்சது. அவளுக்கு என்னப் பிரச்னைனே தெரியாம பல ஆஸ்பத்திரிகளுக்குக் கூட்டிட்டு போனோம். கடைசியா அவ பன்மெய்ப்புல சவால் கொண்ட குழந்தைனு (Multiple disabled child) கண்டுபிடிச்சு சொன்னாங்க'' என்றவரின் வார்த்தைகளின் அந்நாளின் வலி பிரதிபலிக்கிறது.

``அழுகையைத் தவிர வேற எதுவும் எனக்கும் என் கணவருக்கும் ஆறுதலா இல்லை. கண்ணீர் வற்றிப் போற அளவுக்கு அழுது தீர்த்தோம். அதுக்கப்புறம்தான் உண்மை உறைச்சது. நாங்கதான் அவளோட உலகம். அவளுக்குக் கண் தெரியும்... காது கேட்காது, வாய் பேச வராது, நடக்கும் போது பேலன்ஸ் குறைவாக இருக்கும். எந்நேரமும் அவ பக்கத்திலேயே இருக்க ஆரம்பிச்சேன். ஸ்கூல்ல சேக்கனும்னு நினைச்சப்பதான் பிரச்னையே ஆரம்பிச்சது. நார்மல் ஸ்கூல்ல அவள எடுத்துக்கல. காது கேளாதோர் பள்ளியிலயும் சேர்த்துக்கல. வீட்ல அவளுக்குத் தெரிஞ்ச வார்த்தைகள மட்டும் நாக்க மடக்காம பேசி எங்களுக்கு புரிய வெச்சுட்டு இருந்தா.

அவளை உன்னிப்பா கவனிக்கிறப்பதான் ஒரு விஷயம் புரிஞ்சது. நிவேதா மூளை பயங்கர ஷார்ப். சொன்னதை அப்படியே கப்புனு பிடிச்சுகிற கற்பூர மூளை. ஆனா அவ மூளையோட கட்டளைகளை ஏத்துகிடுற அளவுக்கு அவளோட கை கால்கள் ஒத்துழைக்கல. அதை ஒரு சாக்கா நிவேதா எடுத்துக்கலை. வீட்ல இருந்தப்படியே கைவினைப் பொருள்கள் செய்ய கத்துக்கிட்டா. அதே மாதிரி சைய்ன் லாங்குவேஜ் கத்துக்க ஆரம்பிச்சா. செல்போன் கவர், நெக்லஸ், கம்மல்னு அவளே நிறைய பொருள்கள் செய்றா. இந்த வருடம் ஆனந்த விகடன் நம்பிக்கை விருது விழாவில் மேடை ஏற்றப்பட்ட நிவேதாவுக்கு ஒலித்த கரகோஷங்கள் அடங்க வெகு நேரமானது.'' என்றபடி பெருமையுடன் தன் மகளைப் பார்க்கிறார் வனிதா.

பீரியட்ஸ்... நார்மல் பெண்களே உடலளவிலும் மனதளவிலும் துவண்டு போகும் ஒரு தருணம். நிவேதா எப்படிச் சமாளிக்கிறார் என்று வனிதாவிடம் கேட்டோம்'' சொன்னா நம்ப மாட்டீங்க. நிவேதா பொறுத்தவரைக்கும் பீரியட்ஸ் பிரச்னைகள் எதுவும் நான் எதிர்கொண்டது இல்லை. அவளுக்கு பீரியட்ஸ் வர தேதிய அவளே சரியா குறிச்சு வெச்சுப்பா. அதே மாதிரி அந்தச் சமயத்துல, டார்க் கலர் ட்ரஸ்தான் செலக்ட் பண்ணிப்பா. என்கிட்ட கூட எதையும் வெளிக்காட்டிக்க கூடாதுனு நெனைப்பா. என் பொண்ணு செய்ற விஷயங்கள வெளிய சொன்னா எல்லாரும் ஆச்சர்யமா பாப்பாங்க. ஏன்னா, மருத்துவச் சான்றின்படி, நிவேதா நூறு சதவிகிதம் ஊனமுற்ற பெண். அப்படி இருந்தும் இவ்ளோ தூரம் தெளிவா இருக்கானா நிச்சயம் அதுக்கு அவளோட தன்னம்பிக்கைதான் காரணம்.

அதே மாதிரி அப்யூஸ் பத்தியும் என் பொண்ணுக்கு சைன் லாங்குவேஜ்ல சொல்லிக் கொடுத்திருக்கேன். பஸ்ல டிராவல் பண்ணும்போது நிறைய பாலியல் ரீதியான பிரச்னைகள்ஏற்படும். மாற்றுத்திறனாளி குழந்தைங்கன்னா அந்தப் பிரச்னையை வெளியில் சொல்ல முடியாது... அவங்களால் எந்தப் பிரச்னையும் வராதுங்குற தைரியத்துல பஸ்ல பாலியல் ரீதியான சீண்டல்களைச் சிலர் செய்வாங்க. அந்த மாதிரி சமயத்துல பாப்பா என்கிட்டச் சொல்லிடுவா. உதாரணத்துக்கு, இப்போ பஸ்ல டிராவல் பண்ணும்போது யாராவது பாப்பாவைப் பார்த்துட்டே இருந்தா, அம்மா அவங்க என்னைப் பார்க்குறாங்க.. என் முகத்தை மறைச்சு நில்லுங்கன்னு என்கிட்ட சொல்லிடுவா. அந்த மாதிரியான விஷயங்களில் நிவேதா ரொம்பவே கவனமா இருப்பா. ரொம்ப அன்பான பொண்ணும்மா. தன்னைத் தெரிஞ்சவங்ககிட்ட அக்கறையோட நடந்துப்பா. அன்புக்காக ஏங்குற பொண்ணு. என் மூலமா அவளுக்கு அப்படி ஓர் அன்பு கிடைக்கணும்னு கடவுள் நினைச்சிருக்கார் போல...'' என்கிறவர் ஒருசில நிமிடங்களுக்குப் பிறகு தொடர்ந்தார்.

``எல்லோரையும் போல ஒரு திருமண வாழ்க்கையை நாமளும் வாழணுங்குற எண்ணம் என் பொண்ணுக்கு இருக்கு. நிவேதாவால் பேச முடியாததுனால வாய் பேச முடியாத, காது கேட்காத பையனைத்தான் திருமணம் செஞ்சுப்பேன்னு சொல்றா. ஏன்னா, அவளால் பேச முடியாதுங்குறதுனால சைன் லாங்குவேஜ் மூலமாப் பேசுறவங்க இருந்த கம்பர்டபுளா இருக்கும்னு நினைக்கிறா. அவளைப் பொறுத்தவரைக்கும் அவ பின்னாடி நின்னு பேசினா பிடிக்காது. ரொம்பக் கோபப்படுவா. ஏன்னா அவளுக்கு அது கேட்காது இல்லியா... அதனாலேயே ஏதாவது சொன்னாகூட அவ முன்னாடி நின்னுதான் சொல்லுவேன். இந்தக் காரணத்துக்காகவும் சைன் லாங்குவேஜ் தெரிஞ்ச பையனா இருந்தா நல்லதுனு நினைக்கிறார். நிறைய வரன் வருது. ஆனா எதுவும் அவ மனசுக்கும் எங்க மனசுக்கும் பிடிச்ச மாதிரி இல்லை. நிச்சயம் பொறுப்பான ஒரு பையன் கையில அவளை ஒப்படைக்கிற வரைக்கும் என் தேடல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்'' என்று மகள் சார்பாகப் பேசுகிறார் இந்தப் பேரன்புக்காரி.

No comments:

Post a Comment