FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, February 10, 2019

வெற்றிக்கு கிடைப்பது பரிசு... : தோல்விக்கோ அதுதான் பாடம்!

03.02.2019
இன்றைய இளைஞர்களுக்கு, வாழ்க்கையில் ஒரு சிறிய பிரச்னை என்றால் கூட அதை எதிர்கொள்ள தெரிவதில்லை. அதிலும், சிலர் அப்பிரச்னையில் இருந்து மீள முடியாமல், தற்கொலையே தீர்வாக நினைக்கின்றனர்.'வாழ்க்கையில் நாம் சந்திக்கும், தடைகள்தான் வெற்றிக்கான முதல் படி... நீ சந்திக்கும் தோல்விதான் உன்னை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும்' என, நம்பிக்கையூட்டுகிறார் பிரசன்ன குமார்,43.சரி யார் இவர்... அப்படி என்ன சாதனை புரிந்திருக்கிறார் என, புருவம் உயர்த்துபவர்களுக்கு, இதோ அவருடைய சாதனை பட்டியலில் பதில் அளிக்கிறது.பொள்ளாச்சி ஆனைமலையில் வசித்து வரும் பிரசன்னகுமார், பிறவியில் இருந்தே, காது கேளாத வாய் பேச முடியாதவர். சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் கொண்ட இவர், இயற்கை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக, பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார்.

மலேசியா பாராட்டு

மலேசிய அரசாங்கம் இவருக்கு, விருது கொடுத்த பாராட்டியதோடு, ஒவ்வொரு ஆண்டும் கோலாலம்பூரில் இவரது ஓவியங்களை காட்சிக்கு வைக்க அனுமதியும் அளித்துள்ளது. இலை, தென்னை, பனை ஓலை, கூலாங்கற்கள் கொண்டு பல்வேறு படைப்புகளையும் உருவாக்கியுள்ளார். இவர் ஒரு நடனம் மற்றும் மோனோ ஆக்டிங் கலைஞர் என்பது கூடுதல் தகவல். இசையை கேட்கதான் முடியாது; ஆனால் அதை மனதில் உணர்ந்து, எதிரே நடன ஆசிரியரின் கை அசைவுக்கு ஏற்ப நடனமாடுவதில் இவர் சிறந்தவர்.
இவரால், மிமிக்ரி செய்ய முடியாதுதான்; ஆனால் தனி ஒரு நபராக மோனோ ஆக்டிங்கில், ராமாயண கதையை தத்ரூபமாக நடித்து காட்டி அரங்கத்தையே அதிர வைத்தார்.வாய் பேச முடியாதுதான். ஆனால் இவர் எடுத்த புகைப்படங்கள் பேசுகின்றன, இயற்கையின் உன்னதத்தை.குறும்படம் எடுப்பதிலும் வல்லவரான இவர், எடுத்த குறும்படம் ஒன்று, கோவையில் நடந்த திரைப்பட விழாவில் இரண்டாம் பரிசு பெற்றது.எல்லாம் கிடைத்தும் வாழ்க்கையை வாழ தெரியாமல், முடங்கி கிடக்கும் இளைஞர்களே... இவரை பார்த்து இந்த நொடியில் முடிவெடுங்கள்...

உங்களுக்கான லட்சியம் என்னவென்று!இவரால், மிமிக்ரி செய்ய முடியாதுதான்; ஆனால் தனி ஒரு நபராக மோனோ ஆக்டிங்கில், ராமாயண கதையை தத்ரூபமாக நடித்து காட்டி அரங்கத்தையே அதிர வைத்தார்.வாய் பேச முடியாதுதான். ஆனால் இவர் எடுத்த புகைப்படங்கள் பேசுகின்றன, இயற்கையின் உன்னதத்தை!

வெற்றி புகழ் தரும்... தோல்வி பாடம் தரும்!

சைகை மொழியில் பிரசன்னகுமார் நம்மிடம், ''இந்தியாவின் பாரம்பரியத்தை உலகுக்கு, அறிய செய்ய வேண்டும் என்பதற்காக, பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். எந்த ஒரு நிலையிலும் தோல்வியடைந்து விட்டேன் என்பதை ஒப்புக்கொள்ளாதீர்கள். வெற்றி புகழை மட்டுமே தரும்; தோல்விதான் பாடம் கற்பிக்கும்,'' என்றார்.

No comments:

Post a Comment