FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, March 29, 2025

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்கின்றதா ரோட்டரி சங்கம்?

 


Claim: காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது.

Fact: இத்தகவல் தவறானது என்று ரோட்டரி சங்கத் தரப்பு தெளிவு செய்துள்ளது.


“பிறப்பிலிருந்தே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர் என்று உங்களுக்குத் தெரிந்தால், இப்போது காக்லியர் இம்ப்லாண்ட் அறுவை சிகிச்சையின் கண்டுபிடிப்பால் இந்த ஊனமுற்ற குழந்தையை குணப்படுத்த முடியும்.
அறுவை சிகிச்சைக்கு கிட்டத்தட்ட 10 முதல் 12 லட்சம் செலவாகும், ஆனால் கவலைப்பட வேண்டாம், இப்போது Rotary club of Bombay Worli, Dist 3141 இன் உதவியுடன், இந்த அறுவை சிகிச்சை மும்பை SRCC மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது. தயவுசெய்து மற்ற குழுக்களில் பதிவிடவும், இதனால் செய்தி தேவைப்படுபவர்களுக்கு சென்றடையும்”


என்று குறிப்பிட்டு வாட்ஸ்ஆப் தகவல் ஒன்று பரவி வருகின்றது. இத்தகவலை வாசகர் ஒருவர் இத்தகவலை நியூஸ்செக்கர் ஹெல்ப்லைன் எண்ணுக்கு (9999499044) அனுப்பி இதுக்குறித்த உண்மையை கேட்டிருந்தார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக வைரலாகும் தகவலில் குறிப்பிட்டுள்ள பாம்பே வொர்லி ரோட்டரி சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தேடுகையில் இதுபோன்ற எந்த ஒரு சேவையும் தருவதாக அதில் குறிப்பிட்டிருக்கவில்லை.


இதனையடுத்து வைரலாகும் தகவலில் குறிப்பிட்டுள்ள பெருந்துறை சதாசிவம் என்பரை தொடர்புக் கொண்டு இத்தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் கடந்த இரண்டு வருடங்களாகவே பரவி வருகின்றது. இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்தார்.

Conclusion
காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் இலவச அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக வாட்ஸ்ஆப்பில் பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

கரூா்: காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் திருச்சிக்கு சுற்றுலா


26.03.2025
கரூரில் காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைள் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனா்.

காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளா்ச்சி குன்றிய குழந்தைகள் சுற்றுலா பயணம் மேற்கொண்டு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கரூரில் தமிழக அரசின் சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சாா்பில் ஒரு நாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புனித அந்தோணியாா் மனவளா்ச்சி குன்றியோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் மற்றும் மதா் காது கேளாதோா் மற்றும் வாய் பேசாதவா்களுக்கான பயிற்சி மையங்களில் இருந்து சிறப்பாசிரியா்கள், பாதுகாவலா்கள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் என மொத்தம் 45 போ் திருச்சியில் உள்ள பறவைகள் பூங்காவிற்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுற்றுலா பேருந்தை தொடங்கி வைத்த ஆட்சியா் மீ.தங்கவேல் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு பிஸ்கட், குளிா்பானங்கள், குடிநீா், இனிப்புகள் வழங்கினாா்.

நிகழ்வின்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மோகன்ராஜ், மாவட்ட உதவி சுற்றுலா அலுவலா் அமீம் அன்சாரி ஆகியோா் உடனிருந்தனா்.




Friday, March 7, 2025

காதுகேளாதோர் சாம்பியன்ஷிப் போட்டி



27.02.2025
அரியாங்குப்பம்; தளவக்குப்பத்தில் காது கேளாதோர் விளையாட்டு கழகம் சார்பில், 5வது சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

தவளக்குப்பம் அரசு உயர்நிலை பள்ளியில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டிக்கு, பாஷித் தலைமை தாங்கினார். சத்தியபுவன் முன்னிலை வகித்தார். விளையாட்டு துறை இணை இயக்குனர் வைத்தியநாதன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, நிறைவாக ஓட்ட போட்டியில் வெற்றி பெற்ற விவேகன், வசீகரன், சஞ்சுவேல், ஐயப்பன், லாவண்யா, காவியா, சத்யா மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மருத்துவர் வித்யா, வாஸ்கோ நிறுவன உரிமையாளர் ஆனந்த், டேப் எனபில் பவுண்டேஷன் மேலாளர் ஞானவேல், அசோக்குமார், உடற்பயிற்சி ஆசிரியர் ஆனந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Sunday, February 16, 2025

பிளக்ஸ் பேனரில் ஐஸ்வர்யா ராய்! வாய் பேச முடியாத அபிநயா நடிக்க வந்தது எப்படி? கிரேட் ஃபாதர்!




சென்னை: நாடோடிகள் எனும் படத்தில் நடித்த அபிநயா, காது கேட்காத வாய் பேச முடியாதவராக இருந்த போதிலும் அவர் எப்படி நடிப்பதற்கு வந்தார் என்பது தெரிந்து முடியும். இதன் மூலம் உடலில் எந்த பிரச்சினை இருந்தாலும் மனம் வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற பாடத்தையும் கற்கலாம். 

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு அப்பாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு பேசவோ, கேட்கவோ முடியாது என்று பின்னாளில் தெரிகிறது. அப்போது முதல் அந்த அப்பாவுக்கு அந்த குழந்தை தான் உலகம் என்றாகி விடுகிறது. மற்ற குழந்தைகளைப்போல் தன் குழந்தையும் வளர்ந்து ஆசைப்பட்டது போல் வாழ வேண்டும்.

அதை நிறைவேற்றுவதே தன் கடமை என நினைக்கிறார் அந்த தந்தை. அப்படியே அப்பெண்ணும் வளர்கிறாள். ஒரு நாள் ஸ்கூட்டரில் அந்த தந்தை தன் மகளை சாலையில் கொண்டு செல்லும் போது ஒரு ஃப்ளெக்ஸ் போர்டை சுட்டிக் காட்டுகிறாள். 

அதில் ஐஸ்வர்யா ராய் இருக்க அதைப் பார்த்துக் கொண்டே விடுகிறார். அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் அந்த குழந்தை தந்தையை அழைத்து அதே ஃப்ளெக்ஸை காண்பிக்கும் தந்தைக்கு புரிந்து போகிறது. அது போல் ஃப்ளெக்ஸ்களில் வரவேண்டுமென தன் மகள் நினைக்கிறாள் என புரிந்து கொண்ட அவர், அதற்கான காரியத்தில் இறங்கினார். மக்களை வைத்து போட்டோ ஆல்பம் ரெடியாக்கி விளம்பர ஏஜன்சிகள் அலுவலகங்களுக்கு ஏறி இறங்குகிறார். ஆனால் வாய் பேச முடியாத பெண் என வாய்ப்புகள் வரவில்லை. கடைசியாக ஒரு ஏஜன்ஸியிடம் போட்டோ இருக்கிறது. அதைப் பார்க்க கேரளாவிலிருந்து ஒரு விளம்பரப்பட இயக்குனர் ஹைதராபாத் வருகிறார்.

அவரிடம் விளம்பர ஏஜன்ஸி பல பெண்களின் போட்டோக்களை. தன் மகளின் ஆல்பத்தை ஒதுக்கி வைத்தார்கள் என அப்போது அங்கே இருந்த அப்பாவுக்கு தெரிந்து விடுகிறது. அவர் உடைந்து போகிறார். அந்த கேரள இயக்குனர் கார் ஏறப்போகும் பார்க்கிங்குக்கு ஓடிச் சென்று நாதழுதழுக்க தன் மகளின் போட்டோக்களை ஏஜன்ஸி காட்டவில்லையென்றும், தயவு செய்து பார்க்க வேண்டும் என்றும், தன் மகளால் பேசவோ, கேட்கவோ முடியாது என்றும் சொல்லும் போதே அவரின் கலக்கத்தை பார்க்கிறார் அந்த இயக்குனர். 

தந்தையின் எமோஷனலுக்காக போட்டோக்களை பெற்றுக்கொண்டு வந்து விடுகிறார். இது நடந்து பல மாதங்கள் கழித்து இயக்குனர் சமுத்திரக்கனியும், சசிகுமாரும் புதுமுகங்களை தேடி எர்ணாகுளம் வந்து அவரிடம் போட்டோக்களையும், விபரங்களையும், தந்தையின் எமோஷனலையும் சொல்ல போன் கால் ஹைதராபாத்துக்கு போகிறது. 

அப்போது வந்து இறங்கிய பெண் தான் நடிகை அபிநயா. போட்டோடில் டெஸ்ட் பாஸாகி அபிநயாவை நடிக்க வைத்து பார்த்த சமுத்திரக்கனியும், சசிகுமாரும் ஷாக்காகிறார்கள். பெயருக்கேற்றார் போல் எக்ஸ்பிரஷனில் பின்னுகிறார் அபிநயா. அவர் குறைபாடுகள் எதுவுமே தெரியாமல் அசத்துகிறார்.

நாடோடிகள்' படம் வெளியாகி பெரு வெற்றி பெறுகிறது. தெலுங்கு, கன்னட ரீமேக்குகளிம் அபிநயாவையே நடிக்க வைக்கிறார்கள். தெலுங்குப் படங்களிலும் வாய்ப்பு கிடைக்கிறது. பின் சசி 'ஈசன்' பட வாய்ப்பை தருகிறார். 

சமீபத்தில் 'பணி' பார்த்த போது உண்மையில் அசத்தி இருந்தார் அபிநயா. ஒரு காதல் மனைவியாக அவர் எக்ஸ்பிரஷன்கள் எல்லாம் கொள்ளை அழகு. பணி பட பிரமோஷனில் அபிநயாவை மேடையில் உட்கார வைத்து மேடையில் யார் பேசினாலும் எதிரே அவருக்கு புரியும் விதமாக டிரான்ஸ்லேட்டரை வைத்து சைகை பாஷையில் புரிய வைக்க இயக்குனர் ஜோஜூ ஜார்ஜ் செய்த காரியங்களெல்லாம் அவரின் மேல் நன்மதிப்பைக் கூட்டுகிறது. 

ஒருவர் இந்த சமுதாயத்தில் எப்படி குறைகளோடு பிறந்தாளென்ன..யார் தூற்றினாலும், தாழ்த்தினாலும் அவர்களை கவனிக்க வெண் சிறகு தேவதைகள் இருக்கத்தான் செய்யும். செய்யும். செய்யும். செய்யும். செய்யும். செய்கின்றன. அபிநயாவின் அப்பா, சசிகுமார், சமுத்திரக்கனி, ஜோஜு என பல வகை.... வாழ்க்கை எல்லோரும் வாழ்வதற்கே.... இவ்வாறு அவர் தனது போஸ்டில் தெரிவித்துள்ளார்.



வாய் பேச முடியாதவர்கள் வாழும் கிராமம்!


இலங்கை 
குறைந்த வசதிகளுக்கு மத்தியில் வாழும் வாய் பேச முடியாத செவித்திறன் அற்ற விசேட தேவையுடைய மக்கள் வாழும் கிராமம் தொடர்பான செய்தி ஒன்று அனுராதபுரத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

இக்கிராமமானது திரப்பனய பிரதேச செயலகப் பிரிவில் அனுராதபுரம், இல. 553 மிவெல்லேவ கிராம சேவை பிரிவில் உள்ளது.

தினப்பிட்டிகம என்றழைக்கப்படும் இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 20 குடும்பங்கள் வசிக்கின்றன, இதில் 15 குடும்பங்கள் பிறக்கும்போதே வாய் பேச முடியாத நிலை உள்ளது. செவித்திறன் அற்ற விசேட தேவையுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சிரமங்களுக்கு மத்தியில் வசிக்கும் இவர்களின் கிராமத்திற்குள் செல்ல சரியான வீதி இல்லாத பின்னணியில், வெளியூர்களில் இருந்து வரும் லொரிகளில் குடிநீரை அக்கிராமவாசிகள் பெறுகின்றனர்.

மேலும் பெரும்பாலான வீடுகள் களிமண் அல்லது தகர கூரைகளால் கட்டப்பட்டுள்ளன.

தொடர்ந்து காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகும் இக்கிராமத்தில் வசிப்பவர்கள் கூலித்தொழில், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

குறைந்த வசதிகளின் கீழ் வசிப்பவர்களுக்கு விசேட தேவையுடையவர்களுக்கு உதவித்தொகையாக 5,000 ரூபாய் அரசாங்கத்திடம் இருந்து பெற உரிமை உண்டு.

ஆனால், அந்தத் தொகை வாழ்வாதாரத்துக்குப் போதாததால், கூலி வேலை தேடிச் சென்றாலும், விசேட தேவையுடைய இவர்களுக்குக் கூலி வேலைகளும் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அவ்வப்போது கூலி வேலை செய்து சம்பாதிக்கும் சொற்பத் தொகை, வாழ்க்கை நடத்தவோ, குழந்தைகளின் கல்வியைத் தொடரவோ போதாது.

இக்கிராமத்தில் குளிப்பதற்கு அன்றாட நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஏரி உள்ள போதிலும் அதுவும் வறண்டு காணப்படுவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கோடீஸ்வரர் ஒருவர், இக்கிராமத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த மோட்டார் வாகனம் பழுதடைந்து, தண்ணீர் வடிகட்டியும் பழுதடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Thursday, February 13, 2025

வணங்கான் – திரைப்பட விமர்சனம்..




இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான “வணங்கான்” திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய படம். இப்படம் ஒரு தீவிரமான சமூக நோக்கில் படமாக உருவாகியுள்ளது, மேலும் அருண் விஜயின் நடிப்பு மற்றும் பாலாவின் இயக்கம் குறித்து மிகுந்த பாராட்டுகளை பெற்றுள்ளது.

கதை: 
கன்னியகுமாரியில் தனது தங்கையுடன் வாழும் கதாநாயகன் (அருண் விஜய்), வாய் பேச இயலாதவன். தன் கண்முன் வரும் கொடுமைகளை தட்டிக் கேட்டு, அதை அடித்து துவைத்து தனது கோபத்தை வெளியிடுகிறார். வாழ்க்கையின் பல்வேறு சோதனைகளை சந்தித்து, சர்ச் ஃபாதர் உதவியுடன் வேலை கிடைக்கிறது. அங்கே தங்கியிருந்த நிலையில், சண்டைகள் மற்றும் கொலைகள் நிலவுவதை தொடர்ந்து, கதையின் திருப்பம் வரும். அவன் இந்த கொலைகளை ஏன் செய்தான், அதற்கான காரணம் என்ன என்பதே படம் முழுவதும் ஆராயப்பட்டு, அதனால் திரைக்கதை மேலும் ரொமான்ஸ் மற்றும் அதிர்ச்சியுடன் பரபரப்பாக மாறுகிறது. நடிப்பு:


 
அருண் விஜய், வாய் பேச இயலாத கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் அவர் அளித்துள்ள அசாதாரண நிபுணத்துவம், படம் முழுவதும் காட்சியுடன் சேர்ந்து செல்லும் திறனைக் காட்டுகிறது. ரோஷ்ணி பிரகாஷ் மற்றும் ரிதா ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர், அவர்களின் நடிப்பு முக்கியமான துணைத்தொகுதியாக உள்ளது. மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் கதையின் முக்கியக் கண்ணோட்டங்களில் சிறப்பாக நடித்துள்ளனர்.

இயக்கம் மற்றும் திரைக்கதை: 
பாலா இயக்கத்தில் படம் மிகவும் அசாதாரணமாக உருவாகியுள்ளது. சமுதாயத்தில் பெண்கள் எதிர்க்கும் கடும் கொடுமைகளை தட்டிக்காட்டி, அதன் விளைவுகள் பற்றி பேசும் விதத்தில் படத்தை திரைக்கதை நேர்த்தியாக உருவாக்கியது. சமூக அக்கறையும், சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான கருத்துக்களும் மிக முக்கியமான சிக்கல்களாக விளங்குகின்றன.

இசை மற்றும் தொழில்நுட்பம்: 
ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு சிறப்பாக இணைந்துள்ளதை நாம் காணலாம், குறிப்பாக பாடல்கள் மற்றும் பின்னணி இசை மகிழ்ச்சி அளிக்கின்றன. சாம் சி.எஸ் – இன் பின்னணி இசை படம் முழுவதும் மிரட்டலாக இருந்தது. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது.

கடைசியில்: 
“வணங்கான்” படத்தின் ஒரு முக்கிய பாய்ண்ட் அருண் விஜயின் நடிப்பு மற்றும் பாலாவின் இயக்கம் தான். படம் பல்வேறு துக்கங்களையும், கெட்ட மனதுகளையும், குற்றங்களை எடுக்கும் வழிகளையும் அற்புதமாக கையாளும். இது அனைத்து ரசிகர்களையும் கலங்க வைக்கும், அதனால் இப்போது திரையரங்கில் பார்த்திட வேண்டிய ஒரு திரைப்படமாக இது அமைந்துள்ளது.

பிளஸ் பாய்ண்ட்:
  • அருண் விஜயின் நடிப்பு.
  • பாலாவின் சிறந்த இயக்கம்.
  • திரைக்கதை மற்றும் வசனங்கள்.
  • சாம் சி.எஸ் – இன் மிரட்டலான பின்னணி இசை.

மைனஸ் பாய்ண்ட்:
  • குறிப்பிட்ட காட்சிகள் ஒருபோதும் கவனம் பெறவில்லை.

முடிவு: 
இந்த படம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. அதன் திரைக்கதை, நடிப்பு, இசை அனைத்தும் திரைப்பார்வையாளர்களை எளிதில் ஆழமாக கொண்டு செல்லும்.


15 வருடமாக ஆண் நண்பருடன் ரிலேஷன்ஷிப்: அபிநயா தகவல்


02.02.2025
சென்னை: 'நாடோடிகள்' படம் மூலம் அறிமுகம் ஆனவர் அபிநயா. இவர் 'ஈசன்', 'ஜீனியஸ்', 'வீரம்', 'பூஜை', 'தாக்க தாக்க', 'விழித்திரு', 'மார்க் ஆண்டனி' என பல படங்களில் வரிசையாக நடித்தார். அபிநயா பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாதவர். மாற்றுத்திறனளியாக பிறந்த இவர், தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்கிறார். தனது காதலருடன் கடந்த 15 வருடங்களாகவே ரிலேஷன் ஷிப்பில் உள்ளதாக அபிநயா தனது பதிவில் கூறியுள்ளார்.அந்த பதிவில் அபிநயா கூறும்போது, ​​''அவர் எனது சிறு வயது நண்பர். எங்களுக்கே தெரியாமல் நாங்கள் இருவரும் உறவிற்குள் வந்து விட்டோம். இனிமேல் என்னை எந்த ஒரு நடிகருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம்'' என கூறியுள்ளார். விரைவில் அபிநயாவின் திருமண செய்தி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் விஷாலுடன் இணைத்து இவர் பேசப்பட்டார். அதனாலேயே மற்ற நடிகர்களுடன் சேர்த்து பேச வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சமீபத்தில் மலையாளத்தில் பணி என்ற படத்தில் அபிநயா நடித்தார். இதில் இவரது நடிப்பு பேசப்பட்டுள்ளது. ஓடிடியில் வெளியாகி படமும் வெற்றி பெற்றுள்ளது.



காது கேளாத, வாய்ப்பேச முடியாத 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

 


09.02.2025

காது கேளாத, வாய் பேச முடியாத 11 வயது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

மத்தியப்பிரதேசத்தில் காது கேளாத வாய் பேச முடியாத 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் அரசு ஓய்வு இல்லத்திற்கு பின் ஒரு குடிசையில் வசித்து வந்துள்ளார் 11 வயதான காது மற்றும் வாய் பேசமுடியாத சிறுமி ஒருவர்.

இவர் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி காணாமல் போயுள்ளார். காணாமல் போன அடுத்தநாளே பலத்த காயத்துடன் ஒரு அடர்ந்த காட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுமியை கண்ட சிலர், சிறுமிக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டிருந்ததை கண்டனர் . எனவே, உடனடியாக ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட சிறுமியின் உடல்நலனில் எந்த முன்னேற்றமும் இல்லை.. இதனால் , போபாலில் உள்ள ஹமீடியா மருத்துவமனைக்கு அழைத்து சென்று இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை..

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (7.2.2025) சிறுமி பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், குற்றவாளி யார் என்பது குறித்து தேடும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், போலிசார் முழு வீச்சில் குற்றவாளியை தேடி பணியில் இறங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




இலவச மனை பட்டா கோரி மாற்றுத்திறனாளிகள் மனு



கடலூருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையின்போது, ​​தங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சிகரம் அமைப்பைச் சோந்த சையத் முஸ்தபா தலைமையில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதியில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசிக்கின்றனர். எங்களுக்கு நிரந்தர வேலை இல்லை. வாடகை வீட்டுக்கு வாடகையும் கொடுக்க முடியவில்லை. பல ஆண்டுகளாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்து வருகிறோம். எனவே, கடலூருக்கு வருகை தரும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நலத் திட்ட உதவிகள் வழங்கும் போது எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.