FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, May 30, 2014

வெய்யலுார் அரசு பள்ளி பொதுத் தேர்வில் 'சென்டம்': காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி மாணவி கவிதா 411 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம்

27.05.2014, சேத்தியாத்தோப்பு:
சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுார் அரசு பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 16 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவி பாக்கியலட்சுமி 416 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி மாணவி கவிதா 411 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், ரூபம் 404 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை தலைமையாசிரியர் அன்பழகன், கல்வி வளர்ச்சிக்குழுத் தலைவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராமதாஸ் ஆகியோர் பாராட்டினர்.

பார்வையற்றோருக்கு படியளக்கும் பாரதி யுவகேந்திரா- மதுரை மண்ணில் ஒரு மகத்தான சேவை

Thursday, May 29, 2014

நீச்சல் போட்டியில் கலக்கும் காது கேளாதவரான சினேகா

Want to help poor | கலெக்டராகி ஏழைகளுக்கு உதவி செய்யணும் Dinamalar

பிளஸ் 2 தேர்வில் 75 சதவீத மதிப்பெண் எடுத்தவரா நீங்கள்...? உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம்

27.05.2014,
சவுகார்பேட்டையில் செயல்பட்டு வரும் கருணா இன்டர்னேஷனல் என்ற தொண்டு நிறுவனம் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி களின் மேற்படிப்புக்கு உதவிதொகை வழங்க விண்ணப்பங்கள் பெற்று வருகிறது. இதற்கு விண்ணபிப்பவர்கள் நடந்து முடிந்த 12 வகுப்பு தேர்வில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், அவர் களின் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் 4 லட்சத்துக்கு கீழ் இருத்தல் வேண்டும். இதில் 25 சதவீத உதவித்தொகை விதவைகளின் குழந்தை கள், மாற்றுத்திறனாளிகள், சமூகத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு: 98400 95050.

காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் 'ஆல் பெயில்!'

27.05.2014, ஊட்டி :
ஊட்டி அரசு காது கேளாதோர் பள்ளியில், ஆறு மாணவர்களுக்கு, 13 ஆசிரியர்கள் இருந்தும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், 1975ல், அரசு காது கேளாதோர் ஆரம்பப்பள்ளி துவக்கப்பட்டது. கல்வி துறை கட்டுப்பாட்டில் இருந்த இப்பள்ளி, 2012 முதல், மாற்றுத்திறனாளிகள் நல துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி, 1996ல், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது; 130 குழந்தைகள் படித்தனர்; நடப்பாண்டு, 29 பேர் மட்டுமே உள்ளனர். சில ஆண்டுகளாக, இப்பள்ளி, 10ம் வகுப்பு பொது தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்று வந்த நிலையில், 2013 - 14 கல்வி ஆண்டில் தேர்வு எழுதிய, ஆறு மாணவ, மாணவியரும் தோல்வியடைந்துள்ளனர். இது, பெற்றோர் மற்றும் கல்வி துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, May 25, 2014

அரசு காதுகேளாதோர் பள்ளியில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத பரிதாபம்

24.05.2014, ஊட்டி, :
ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே மாற்று திறனாளிகள் நலத்துறை கட்டுபாட்டில் உள்ள காதுகேளாதோருக்கான சிறப்பு அரசு உயர்நிலைபள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1975ம் ஆண்டு கல்வித்துறை மூலம் குன்னூரில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 20 மாணவ, மாணவியருடன் காதுகேளாதோருக்கான அரசு தொடக்க பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து சமூக நலத்துறையின் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட இப்பள்ளி 1986ம் ஆண்டு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மாற்றப்பட்டது. இப்பள்ளி 6,7,8 என ஒவ்வொரு வகுப்புகளாக துவக்கப்பட்டன. பின்உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு விடுதியுடன் கூடிய பள்ளியாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு முதல் இப்பள்ளி தமிழக அரசின் மாற்று திறனாளிகள் கட்டுபாட்டில் இயங்கி வருகிறது.

பள்ளி ஆரம்பிக்கப்பட்டது முதல் 1997 வரை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு கற்பிக்கப்பட்டு வந்தது. 1998ல் இருந்து அரசு மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது இப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் 8க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் இந்த கல்வியாண்டில் 6 மாணவ, மாணவியர்கள் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதினார்கள். ஆனால், தேர்வு எழுதிய ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இச்சம்பவம் மாணவ, மாணவியர்கள் மட்டுமில்லாமல் பெற்றோர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற பொது தேர்வில் இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அரசு காதுகேளாதோர் பள்ளி மாணவ, மாணவியர்கள் முழுமையாக தேர்ச்சி பெறாததற்கு ஆசிரியர்களிடையே நிலவி வரும் பனிப்போரும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இதனால், மாணவ, மாணவியர்களை கண்டு கொள்ளாததால் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆசிரியர்களிடையே உள்ள பனிப்போரால் மாணவ, மாணவியர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ‘அரசு காதுகேளாதோர் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் உள்ள நிலையில், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 6 பேரும் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாததற்கு காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்’ என்றார்.
- Dinakaran

No Teacher with Sign Interpretation in Deaf Schools - Poor Results - செய்கை மொழி தெரியாத ஆசிரியர்களால் காது கேளாதோர் கல்வி பாதிப்பு - முதலமைச்சர் தலையிட கோரிக்கை

  • 10th Std: Once again poor results in Deaf Schools
  • 100% failed in Ooty Deaf School
  • All Teachers working in these schools do not know sign language
  • Question arise how can they teach deaf children? Deaf Association raising this vital question?
  • Plea to appoint deaf graduates & postgraduates with suitable training
  • English is not taught to them upto 10th std, causing difficulties in higher studies like computer education
  • Demand to teach English from 6th Std without examination sytem
  • CM's intervention needed 


Saturday, May 24, 2014

காலால் தேர்வு எழுதி சாதனை படைத்த பத்தாம் வகுப்பு மாணவர்

24.05.2014,
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் காலால் எழுதி சாதனை படைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நேரு நினைவு சம்பூரணி அம்மாள் மாற்றுத்திறனாளி பள்ளியைச் சேர்ந்த மாணவர் மகேஷ்.

இவர் பிறவியிலேயே இரண்டு கைகளையும் இழந்தவர். ஆனால் தளராத மன உறுதியுடன் படித்த இவர் தனது கால்களையே கைகளாக கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளார்.

இவர் தற்போது தமிழில் 53, ஆங்கிலத்தில் 51, அறிவியலில் 70, சமூக அறிவியலில் 70, கணிதத்தில் 52 என மதிப்பெண்களை பெற்று மொத்த மதிப்பெண்ணாக 282 மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்துள்ளார்.