27.05.2014, ஊட்டி :
ஊட்டி அரசு காது கேளாதோர் பள்ளியில், ஆறு மாணவர்களுக்கு, 13 ஆசிரியர்கள் இருந்தும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், 1975ல், அரசு காது கேளாதோர் ஆரம்பப்பள்ளி துவக்கப்பட்டது. கல்வி துறை கட்டுப்பாட்டில் இருந்த இப்பள்ளி, 2012 முதல், மாற்றுத்திறனாளிகள் நல துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி, 1996ல், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது; 130 குழந்தைகள் படித்தனர்; நடப்பாண்டு, 29 பேர் மட்டுமே உள்ளனர். சில ஆண்டுகளாக, இப்பள்ளி, 10ம் வகுப்பு பொது தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்று வந்த நிலையில், 2013 - 14 கல்வி ஆண்டில் தேர்வு எழுதிய, ஆறு மாணவ, மாணவியரும் தோல்வியடைந்துள்ளனர். இது, பெற்றோர் மற்றும் கல்வி துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment