Thursday, July 31, 2014
மாற்றுத்திறன் மாணவருக்கு கல்வி உதவித்தொகை
மாற்றுத் திறனாளிகளாக அடையாளம் காணப்பட்ட பிறகு அவர்களுக்கு மருத்துவம்,
கல்வி, பொருளாதாரம், தொழில் என நான்கு வகைகளில் அரசு பல்வேறு உதவிகளை
வழங்குகிறது. கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கி வரும்
கல்வி உதவித்தொகை குறித்து அந்தத் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் விளக்கம்
அளிக்கின்றனர்.
எந்தெந்த மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி அளிக்கப்படுகிறது?
பார்வையற்றவர், பேச்சுத் திறன் குறைந்தவர்கள், செவித்திறன் இழந்தவர்,
மனவளர்ச்சி குன்றியவர், கடும் உடல் ஊனமுற்றோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு
குணமடைந்தோர் ஆகிய மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புக் கல்வி
அளிக்கப்படுகிறது.
இயல்பான பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் சேர்க்கப்படுகிறார்களா?
அனைத்து அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சாதாரண மாணவர்கள் பயிலும்
பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கென
சிறப்பு ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். பள்ளி தொடங்கும்
ஒரு மணி நேரத்துக்கு முன்பாக மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு எந்த
மாதிரியான பாடம் கற்பிக்கலாம் என சக ஆசிரியர்களுடன் சிறப்பு ஆசிரியர்கள்
ஆலோசனை பெற வேண்டும். அதுபோல் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக மாற்றுத்திறன்
கொண்ட மாணவர்களுக்கு என்ன கல்வி, பயிற்சி அளிக்கப்பட்டது என்று
கலந்தாலோசிக்க வேண்டும்.
கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறதா?
ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம்
ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3
ஆயிரம் வழங்கப்படும். 9-ம் வகுப்பு மற்றும் அதற்குமேல் படிக்கும்
மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெற முந்தைய ஆண்டுத் தேர்வில் 40 சதவீதம்
மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
9 முதல் 12-ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ, ஐ.டி.ஐ. படிப்பவர்களுக்கு
ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு
படிப்போருக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரமும், முதுநிலை பட்டப்படிப்பு
படிப்போருக்கு ரூ.7 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
பார்வையற்றோர் படிக்க இயலாத சூழலில் உதவிக்கு வைக்கும் வாசிப்பாளருக்கு அரசு மூலம் ஏதேனும் உதவி வழங்கப்படுகிறதா?
எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் டிப்ளமோ படிக்கும்
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், உதவிக்கு வைத்துக் கொள்ளும்
வாசிப்பாளருக்கு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இளநிலை
பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளியின் வாசிப்பாளருக்கு ரூ.5
ஆயிரமும், முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத் திறனாளியின்
வாசிப்பாளருக்கு ரூ.6 ஆயிரமும் வழங்கப்படும்.
Wednesday, July 30, 2014
மும்பை மாற்று திறனாளிபெண்ணிற்கு ஒபாமா அழைப்பு
27.07.2014, மும்பை:
இந்தியாவை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணான நேஹா பி.நாயக்கிற்கு தன்னுடன் இரவு விருந்தில் பங்ககேற்க அமெரி்க்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். உலகம் மழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த மாற்று திறனாளிகளை அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மும்பையை சேர்ந்த நேஹாவும் ஒருவர். மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஷாட்புட் பிரிவில் தன்னுடைய திறமையை நிருபித்துள்ளார். ஒபாமா அழைப்பு குறித்து நேஹா கூறுகையில் தன்னுடைய பிறந்த நாளின் சிறப்பு பரிசாக கருதுவதாக தெரிவித்தார். மேலும் ஒபாமாவை சந்திக்கும் போது உலகம் முழுவதும் உள்ள மாற்று திறனாளிக்களுக்கான தேவைகள் குறித்து தெரிவிக்க உள்ளதாக கூறினார். முன்னதாக நேஹா குறித்து அவரது பெற்றோர் ஆஷா பிரகாஷ் தம்பதியினர் கூறுகையில் 5 வயது வரை மற்ற குழந்தைகள போல் இருந்ததாகவும் காய்ச்சல் காரணமாக பிற குழந்தைகளை போன்று மூளை வளர்ச்சி இல்லாமல் இருப்பதை கண்டறிந்ததாகவும், பின்னர் இவர்களுக்கென உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டதையடுத்து தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பதாக தெரிவித்தனர்.
-DINAMALAR

Tuesday, July 29, 2014
அமெரிக்காவின் தன்னம்பிக்கைப் பெண்: போரில் காலை இழந்த வீராங்கனை
மெலிஸா ஸ்டாக்வெல். மிகப்பெரிய அதிர்ஷ்டக்காரர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் இவர், ஒரு காலை முழுவதுமாக இழந்தவர். அமெரிக்காவின் மாற்றுத் திறனாளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், விளையாட்டு வீராங்கனையும் திகழும் மெலீஸா, ஈராக் போரின் போது அமெரிக்கா சார்பில் போர் முனைக்குச் சென்றவர். லெப்டினன்ட் அதிகாரியாக பாக்தாத் நகரச் சாலையில் ராணுவக் கண்காணிப்பு வாகனங்களை வழிநடத்தியவர்.
2004-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்த மெலிசாவின் இடதுகால் துண்டிக்கப்பட்டது.. இந்த வகையில் ஈராக்கில் அமெரிக்காவுக்காக தனது காலை இழந்த முதல் ராணுவ வீராங்கனை இவர்தான். இந்த இழப்பால் அவர்
Monday, July 28, 2014
Friday, July 25, 2014
மாற்று திறனாளிகள் பள்ளிகளில் விரைவில் சத்துணவு திட்டம்: முதல்வர் அறிவிப்பு
25.07.2014 சென்னை:
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகளுக்கும் சத்துணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று, பேரவை விதி 110ன் கீழ் வெளியிட்ட அறிக்கை:
மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் தற்போது 11 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 21 மாவட்டங்களிலும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் அமைக்கப்படும். இதற்கென அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 92 லட்சத்து 10,800 கூடுதல் செலவு ஏற்படும்.
தமிழ்நாட்டில் 14 வயதிற்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோருக்கான தங்கும் வசதி, உணவு மற்றும் தொழிற் பயிற்சியுடன் கூடிய 31 இல்லங்கள், 21 மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இல்லங்களை தருமபுரி, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஆண்களுக்கும், விருதுநகர், அரியலூர், திருப்பூர், நீலகிரி மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் பெண்களுக்கும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதனால், அரசுக்கு ரூ.1 கோடியே 6 லட்சத்து 34,800 செலவு ஏற்படும்.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ், செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில், விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஒரு நபருக்கு ரூ.650 வீதம் உணவூட்டுச் செலவினம் வழங்கப்படுகிறது. இச்சிறப்புப் பள்ளிகளில், தற்போது மதிய உணவு வழங்கப்படுவதில்லை. எனவே, இந்த பள்ளிகளுக்கும் சத்துணவு திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம், சுமார் 1,733 மாணவ, மாணவியர் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.38 லட்சத்து 99,250 கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-Tamil Murasu

Wednesday, July 23, 2014
ஒரே மாதிரியான உதவித்தொகை வழங்க வேண்டும்: மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
23.07.2014, நாடு முழுவதும் ஒரே மாதிரியான உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதை வ-யுறுத்தி திருவாரூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தபால் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தலைமை தாங்கியது.
மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரி செலுத்துவதில் முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Monday, July 21, 2014
ஆந்திராவில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை தாக்கிய ஆசிரியர்
21.07.2014
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை, பள்ளி ஆசிரியர் ஒருவர் மிகவும் கொடூரமாக தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன. மனதை பதைபதைக்கச் செய்யும் இந்த சம்பவம், காக்கிநாடாவிலுள்ள தனியாருக்குச் சொந்தமான பார்வையற்றோர் பள்ளியில் நிகழ்ந்துள்ளது. மாணவர்களை கடுமையாகவும் சரமாரியாகவும் பிரம்பால் அடிக்கும் நபர், அந்த பள்ளியின் முதல்வரும் ஆசிரியருமான ஸ்ரீநிவாஸ் என்பது தெரியவந்துள்ளது. மாணவர்கள் கெஞ்சியும், மனம் இறங்காத அந்த ஆசிரியர், கதறி அழுத மாணவர்களை தனது ஆத்திரம் தீர அடித்துள்ளார். மாணவர்களை அடிப்பதற்கு பள்ளியின் செயலாளர் கே.வி.ராவ் உதவுவதும் வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது. 2 தினங்களுக்கு முன் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பான காட்சிகள், இன்று தொலைக்காட்சிகளில் வெளியானது. இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி முதல்வர் ஸ்ரீநிவாஸ், அவருக்கு உதவிய கே.வி.ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியை ஆய்வுசெய்த கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர், பள்ளியை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார். மாணவர்களை பள்ளி முதல்வர் கொடூரமாக தாக்கியது தொடர்பான விசாரணை நடத்த வருவாய் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை இரக்கமின்றி தாக்கிய அந்த தனியார் பள்ளியின் முதல்வர் ஸ்ரீநிவாசும் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மனம் இறங்காத அந்த ஆசிரியர், கதறி அழுத மாணவர்களை தனது ஆத்திரம் தீர அடித்துள்ளார். மாணவர்களை அடிப்பதற்கு பள்ளியின் செயலாளர் கே.வி.ராவ் உதவுவதும் வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது. 2 தினங்களுக்கு முன் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பான காட்சிகள், இன்று தொலைக்காட்சிகளில் வெளியானது. இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளி முதல்வர் ஸ்ரீநிவாஸ், அவருக்கு உதவிய கே.வி.ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியை ஆய்வுசெய்த கிழக்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர், பள்ளியை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார். மாணவர்களை பள்ளி முதல்வர் கொடூரமாக தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த வருவாய் வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை இரக்கமின்றி தாக்கிய அந்த தனியார் பள்ளியின் முதல்வர் ஸ்ரீநிவாசும் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, July 17, 2014
காது கேளாத, பேச முடியாதோர் சிறப்பு பள்ளியான கதை
”மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்” வாழ்ந்த ராமாவரம் தோட்டம்..
காது கேளாத, பேச முடியாதோர் சிறப்பு பள்ளியான கதை
--------------------------------------------------------------------------------------
" அமெரிக்காவில் சிகிச்சை முடிச்சு வந்தப்போ சரியாப் பேச முடியாத காரணத்தினால... அதிகமாக தனிமையை நாடினார்.
அந்த நாட்களில் திடீர் திடீர்னு படுக்கையைவிட்டு எழுந்து... என்னை, இல்லேன்னா மாணிக்கத்தை (எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டு இன்று ஜானகி அம்மாளுடன் இருக்கும் ஒரே பழைய மனிதர்) அழைச்சு, கையைப் பிடிச்சுக்கிட்டு தோட்டத்தைச் சுத்திச் சுத்தி வந்து பெருமூச்சுவிடுவார்.
அப்போ ஒருநாள், இங்க வேலை பார்த்துட்டு இருந்த ஒரு பெரியவரோட மகள், தன் எட்டு வயசுப் பேத்தியைக் கூட்டிட்டுத் தோட்டத்துக்கு வந்திருந்தா. அந்தப் பேத்தி வாய் பேச முடியாத பொண்ணு. முறையா டாக்டர்கிட்ட காண்பிக்காம - காண்பிக்க வசதி இல்லாமதான் இந்த நிலைமைக்கு ஆளாயிருக்குன்னு சொல்லி அந்தப் பெரியவர் அழுததைக் கேட்டார்.
உடனே தனக்கு ட்ரீட்மென்ட் தந்துட்டு இருந்த டாக்டர்களைக் கூப்பிட்டு, அந்தப் பொண்ணுக் கும் சிகிச்சை செய்யச் சொன்னார். ஆச்சர்யப் படற அளவுல அந்தப் பொண்ணுக்கு எட்டாவது வாரமே ஓரளவு பேச வந்திட்டுது. அன்னிக்கு அவர் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
அதுல இருந்தே அவர் கொஞ்சம் மனசு லேசான உணர்வுல இருந்தார்னு சொல்லலாம். அப்போ தான் சொத்துக்கள் பத்தி இப்படி ஒரு நல்ல முடிவு எடுத்திருப்பார்னு நினைக்கிறேன். இந்த ஏழரை ஏக்கர் நிலத்துல இந்த வீடு இருக்கிற இடம் போக, மீதி இருக்கிற எல்லா இடத்தையும், வாய் பேச இயலாத, காது கேட்கும் திறன் குறைஞ்ச குழந்தைகளுக்கான ஸ்கூல் ஆரம்பிச்சு நடத்தணும்னு உயில்ல எழுதிவெச்சிட்டாரு.
அப்படி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பள்ளியையும் இதுல சேர்ந்து படிக்கிற பிள்ளைகளையும் பார்க்கிறப்போ, என் மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குது.''
(1993-ம் ஆண்டில் தமிழ் வார
இதழ் ஒன்றுக்கு அமரர் எம்.ஜி.ஆரின் மனைவி, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜானகி
அம்மையார் அளித்த
பேட்டி )
Thursday, July 10, 2014
அம்ருதா ப்ரியதர்ஷினி பாலனோ கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாத மாற்றுத்திறனாளி!
கரை தெரிகிறது... பாய்மரம்
அவிழ்க்கப்பட்ட இரண்டு
சிறு கப்பல்கள் அலைகளில் ஏறி, கடலில் மிதந்தபடி செல்கின்றன...
ஏசுநாதர், தன் சீடர்களுடன் கடைசி விருந்தில் அர்த்தம் பொதிந்த அமைதியோடு
அமர்ந்திருக்கிறார்...
விதைகளும் சதைப்பற்றும்
பளிச்சிட மஞ்சள் பூசணி
துண்டு ஒன்று தரையில்
கிடத்தப்பட்டிருக்கிறது...
அத்தனையும் தத்ரூபமான
உயிர்ப்புள்ள ஓவியங்கள்...
பேசும் ஓவியங்கள்.
இவற்றை வரைந்த அம்ருதா ப்ரியதர்ஷினி பாலனோ கேட்கும் திறனும் பேசும் திறனும் இல்லாத மாற்றுத்திறனாளி!
சென்னை, கிண்டியில் உள்ள அம்ருதாவின் வீட்டுக்குப் போனபோது, கண்ணன், ராதையுடன் காதல் வயப்படும் காட்சியை வரைந்து கொண்டிருந்தார். நம்மை மலர்ந்து வரவேற்று, சைகையாலும் எழுதியும் கேட்கும் கேள்விகளுக்கு சளைக்காமல் அதே முறையில் பதில்களை படபடவென சொல்கிறார் அம்ருதா. ‘‘பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையிலதான். அப்பா பாலன் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் டாக்டர். அம்மா பெட்ஸி பாலன் ஹோம் மேக்கர்.
சமூக விஷயங்கள்ல ஆர்வமாக ஈடுபடறவங்க. நான் ரெண்டாவது பொண்ணு. என் கூடப் பிறந்த ரெண்டு பேரும் நார்மலாத்தான் இருக்காங்க. அம்மா, அப்பா முகம் கண்டு சிரிக்க ஆரம்பிச்ச நேரம்... ஒருநாள் வீட்டுல பாத்திரங்கள்
Tuesday, July 8, 2014
மாற்றுதிறனாளிகளை ஏமாற்றிய ரயில்வே பட்ஜெட்
* Even it is not ready consider the demands to facilitate without sanctioning separate funds like
-- *Concessional E-ticketing facility
-- * to recognise general disability certificate given by the state instead of asking separate certificate -
* Still long way to go for universal designed - accessible platforms, coaches.
* Assurances given in the last budget not yet fulfilled
Sunday, July 6, 2014
மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரிச் சலுகை அளிக்க கோரிக்கை
05.07.2014, மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரிச் சலுகையை கூடுதலாக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளதாக அத்துறை அமைச்சர் தாவர்சந்த் கேலாட் கூறியுள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் விவகாரங்களுக்கான மாநில ஆணையர்கள் கூட்டம் புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதையொட்டி செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக வருமான வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இப்போதுள்ள சலுகையை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இதனைப் பரிசீலித்துவருவதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியிருக்கிறது.
மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மசோதாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாநிலங்களவையில் அறிமுகம் செய்திருந்தது. மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து அந்த மசோதாவை புதிய நிலைக்குழு பரிசீலனை செய்யும். வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு நிலைக்குழு அமைக்கப்படும். நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் பிறகு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பாக பல்வேறு மத்திய அமைச்சகங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலன் தொடர்பாக மாநில அரசுகள் தனித் துறை அமைப்பது அவசியமாகும் என்று அவர் கூறினார்.

Thursday, July 3, 2014
தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டியாய் மாற்றுத் திறனாளிகளே திகழ்கின்றனர்
- விவரங்கள்
- எழுத்தாளர்: பெ.மணியரசன்
- தாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்
- பிரிவு: நிகழ்வுகள்
- வெளியிடப்பட்டது: 03 ஜூலை 2014
தமிழகத்தில் சற்றொப்ப 22 இலட்சம் மாற்றுத் திறனாளிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை சீர்தூக்கி விடும் வகையிலான பல சட்டங்களை நடுவண், மாநில அரசுகள் அவ்வப்போது இயற்றி வருகின்றன. ஆனால், இவற்றை நடைமுறைப்படுத்த மாற்றுத் திறனாளிகள் கடும் போராட்டத்தையே சந்திக்க வேண்டியிருக்கிறது. தொடர்வண்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கென தனிப்பெட்டி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் அதை மாற்றுத்திறனுடையோர் அல்லதார் அத்துமீறி நுழைந்து பயன்படுத்துகின்றனர். அதோடு மட்டுமின்றி, அப்பெட்டியில் ஏறும் மாற்றுத் திறனாளிகள் மீதும் துன்புறுத்தல்கள் நிகழ்கின்றன. மாற்றுத் திறனாளிகளை இழுத்துத் தள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அவ்வகையில், கடந்த 13.06.2014 அன்று காலை, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திரு. தீபக், திருச்சியிலிருந்து சென்னை வரை பல்லவன் தொடர்வண்டியில்
Wednesday, July 2, 2014
Tuesday, July 1, 2014
Union Budget 2014-15: Finance minister urged to raise income tax slab for disabled people
CHENNAI: Disabled Rights Group (DRG), Delhi, has urged finance minister Arun Jaitley to increase the income tax slab for disabled people and for those who have dependents with disability.
"The cost of living is generally higher for those living with disabilities compared to those without disabilities -- medical expenditure, cost of care-taker, assistive aids, rehabilitation services, home adaptations, transportation and costs on day to day living. The cost of these services have been continuing to increase quite steeply in the recent years," said Javed Abidi, convener of DRG.
The current income tax rebate for people with disabilities happened more than 10 years ago, in 2003, when the deduction was increased from Rs 40,000 to Rs 50,000 for persons with disabilities and those with dependents with disability, and an enhanced deduction of Rs 75,000 was introduced in case of people with severe disability. The deduction in case of people with severe disability was increased to Rs 1,00,000 in 2009.
"Now we want the government to increase the income tax slab from Rs 50,000 to Rs 1,00,000 for persons with disabilities or those who have dependents with disability. And in case of people with severe disability, from Rs 1,00,000 to 2,00,000," said Abidi.

Subscribe to:
Posts (Atom)