FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, July 6, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரிச் சலுகை அளிக்க கோரிக்கை

05.07.2014, மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரிச் சலுகையை கூடுதலாக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளதாக அத்துறை அமைச்சர் தாவர்சந்த் கேலாட் கூறியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் விவகாரங்களுக்கான மாநில ஆணையர்கள் கூட்டம் புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதையொட்டி செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக வருமான வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இப்போதுள்ள சலுகையை இரட்டிப்பாக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இதனைப் பரிசீலித்துவருவதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியிருக்கிறது.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மசோதாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாநிலங்களவையில் அறிமுகம் செய்திருந்தது. மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து அந்த மசோதாவை புதிய நிலைக்குழு பரிசீலனை செய்யும். வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு நிலைக்குழு அமைக்கப்படும். நிலைக்குழுவின் பரிசீலனைக்குப் பிறகு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பாக பல்வேறு மத்திய அமைச்சகங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலன் தொடர்பாக மாநில அரசுகள் தனித் துறை அமைப்பது அவசியமாகும் என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment