FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, July 29, 2014

அமெரிக்காவின் தன்னம்பிக்கைப் பெண்: போரில் காலை இழந்த வீராங்கனை

வாழ்வின் நெருக்கடிகளில் மனம் தளரக் கூடாது, தடைகளை எதிர்த்துத் தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும் என்பன போன்ற வரிகள் பேசுவதைப் போன்று செயலுக்கு எளிதானவை அல்ல. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைத் துணிச்சலாக எதிர்கொண்டார்.
மெலிஸா ஸ்டாக்வெல். மிகப்பெரிய அதிர்ஷ்டக்காரர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் இவர், ஒரு காலை முழுவதுமாக இழந்தவர். அமெரிக்காவின் மாற்றுத் திறனாளிகளின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், விளையாட்டு வீராங்கனையும் திகழும் மெலீஸா, ஈராக் போரின் போது அமெரிக்கா சார்பில் போர் முனைக்குச் சென்றவர். லெப்டினன்ட் அதிகாரியாக பாக்தாத் நகரச் சாலையில் ராணுவக் கண்காணிப்பு வாகனங்களை வழிநடத்தியவர்.

2004-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் பலத்த காயமடைந்த மெலிசாவின் இடதுகால் துண்டிக்கப்பட்டது.. இந்த வகையில் ஈராக்கில் அமெரிக்காவுக்காக தனது காலை இழந்த முதல் ராணுவ வீராங்கனை இவர்தான். இந்த இழப்பால் அவர்
சோர்ந்துவிடவில்லை. காலை இழந்த மறு கணமே, விளையாட்டுப் போட்டிகளில் எப்படிப் பங்கேற்பது எனச் சிந்திக்கத் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார் இவர். குண்டுவெடிப்பில் சிக்கிய தாம் உயிருடன் இருப்பதே மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்கிறபோது, இழந்துவிட்டதை எண்ணிக் கவலை கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்பது மெலிசாவின் கருத்து.

பாக்தாத்தில் குண்டுவெடிப்பில் குற்றுயிராகக் கிடந்த இவருக்கு 52 நாள்கள் தொடர் அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிறகு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. தன்னம்பிக்கையுடன் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். 2008-ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த பாராலம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற இவருக்கு, ஈராக் போர்முனையில் பணியாற்றிவிட்டு பாராலம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட முதல் நபர் என்ற பெருமை கிடைத்தது. 100 மீட்டர் ப்ரீஸ்டைல், 400 மீட்டர் ப்ரீஸ்டைல், 100 மீட்டர் பட்டர்ப்ளை போன்ற போட்டிகளில் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்ட மெலீசாவுக்குப் பதக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

தொடர் தோல்விகளுக்குப் பிறகும் அவரது விளையாட்டுக் கனவுகள் முற்றுப்பெறவில்லை. பதக்கங்களைப் பெறாவிட்டாலும், சீன பாரலம்பிக் போட்டிகள் தமக்கு நிறையப் பாடங்களைக் கற்றுத்தந்ததாகக் கூறிய மெலீசா, நீச்சல், சைக்கிள், ஓட்டம் ஆகியவற்றைக் கொண்ட பாரா ட்ரையத்லான் போட்டிகளுக்காகக் கடுமையாகப் பயிற்சி பெற்றார்.

2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் பாரா ட்ரையத்லான் உலகச் சாம்பியன் போட்டிகளில் அமெரிக்க அணிக்காகப் பங்கேற்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத்தந்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிறந்த மாற்றுத்திறனாளி ட்ரையத்லான் வீராங்கனை என்ற பட்டமும் இவருக்கு அளிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் பாராலிம்பிக் போட்டிகளில்தான் ட்ரையத்லான் போட்டிகள் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. மெலிசாவின் அடுத் இலக்கு, இதில் பதக்கங்களைக் குவிப்பதுதான்.

விளையாட்டு தவிர, மாற்றுத் திறனாளிகளுக்கான சேவையிலும் மெலீசாவுக்கு ஆர்வம் உண்டு. 2005-ம் ஆண்டு போரில் உறுப்புகளை இழந்தவர்களுக்கான அமைப்பில் இயக்குநர் குழுமத்தில் பங்கேற்றுள்ளார். இவரது ஆளுமை நிறைந்த பேச்சு, உலகம் முழுவதும் இவருக்கு பெரும்பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. வாழ்வில் தடைகளைத் தகர்த்து தன்னம்பிக்கை பெறுவதற்கு இவரது வாழ்வும் பேச்சும் உதாரணங்கள் என்று அமெரிக்கர்கள் போற்றுகிறார்கள். ஒரு காலைக் கொண்டு சாதித்திருப்பதை இருகால்கள் மூலம்கூடச் சாதித்திருக்க இயலாமல் போயிருக்கலாம் என்கிறார், இந்தத் தன்னம்பிக்கை நட்சத்திரம்.

No comments:

Post a Comment