01.01.2017
தனி ஒருவராக இருந்து சுமார் 4000 திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த விஜயராஜ் என்பவர்,பர்னிச்சர் தொழில் செய்து வருகிறார்.பொது சேவைகளில் நாட்டம் உள்ள இவர்,கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் காது கேளாதோருக்கு இடையே சுமார் 4000 திருமணங்களை தன் சொந்த செலவில் நடத்தி வைத்துள்ளார்.
திருமண செலவுகளுக்கு பணம் வேண்டும் என்பதற்காகவே,தனது செலவுகளை குறைத்துக் கொண்டுள்ளது மட்டுமின்றி,சொந்த பங்களாவை விட்டுவிட்டு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.கடந்த 2000-ஆம் ஆண்டு காது கேளாதோருக்காக சுயம்வரா என்ற அறக்கட்டளையை தொடங்கிய இவர்,தற்போது ஏழ்மையில் உள்ள காதுகேளாதோர் படிப்பதற்காக தனது அறக்கட்டளை மூலம் பள்ளி ஒன்றையும் துவங்கியுள்ளார்.
“நான் திருமணம் செய்து வைத்த அனைவருமே எனது மகன்,மகள் தான்.அப்படி பார்த்தால் எனக்கு கிட்டத்தட்ட 8,000 பிள்ளைகள்.நான் திருமணம் செய்து வைத்த அனைவரும் என்னை அப்பா எனவும்,அவர்களுடைய குழந்தைகள் தாத்தா எனவும் தான் அழைப்பார்கள்.இதைப் பார்த்து என் மகன் கூட பொறாமைப்படுவான்.”என்கிறார் விஜயராஜ்.
அவருடைய இந்த பொதுச் சேவைக்கு அவருடைய மனைவி பக்கபலமாக இருந்து வருகிறாராம்.

No comments:
Post a Comment