24.01.2017
செவித்திறன் பாதிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பயணப் படி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: செவித்திறன் குறைபாடு 60 டெசிபல் மற்றும் அதற்கும் அதிகமாக இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பயணப் படி இரட்டிப்பாக்கப்படுகிறது. இதுவரை அனைத்து ஊழியர்களுக்கும் பயணப் படியாக மாதந்தோறும் ரூ.1,600 வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சுகாதாரத்துறையின் பரிந்துரையின்பேரில் செவித்திறன் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பயணப் படியை இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, செவித்திறன் பாதிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு பயணப் படியாக மாதந்தோறும் ரூ.3,200 வழங்கப்படும்.
முழுமையாக காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என அந்த அறிக்கையில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு செவித்திறன் 69% பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பயணப் படியை ஏதேனும் அரசு ஆனை இருக்கிறதா
ReplyDelete