FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, January 14, 2017

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வாய் பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இயக்குனர் சசிஆனந்த் தகவல்

13.01.2017, ஸ்ரீவில்லிபுத்தூர்,
பொங்கல் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வேந்தர் ஸ்ரீதரன், இயக்குனர்கள் அறிவழகி, சசிஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம், துணை வேந்தர் சரவண சங்கர், பதிவாளர் வாசுதேவன், டீன் ஆறுமுகம், மாணவர் சேர்க்கை இயக்குனர் லிங்கசாமி மற்றும் பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடந்து இயக்குனர் சசிஆனந்த் கூறியதாவது;–

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு மிகுந்த படிப்புகள் உள்ளன. மாணவர்களுக்கு இரண்டாம் ஆண்டு முதல் வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு கடந்த ஆண்டு 1,450 பேர் வேலை வாய்ப்பு பெற்று ரூ.4.5 லட்சம் வருட ஊதியத்தில் பலர் பல்வேறு நிறுவானங்களில் வேலையில் சேர்ந்துள்ளனர்.

மாணவர்களை வேகம், மித வேகம், குறை வேகம், என பகுத்து வாய் பேசாத, காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் பி.டெக். பிரத்யேகத்துறையில் சேர்ந்து மதுரை, சென்னை, பெங்களூரு கம்பெனிகளில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன் தலைமையிலான குழுவினர் பார்க்க சென்ற போது தங்களுக்கு மறு வாழ்வு கிடைத்ததற்காக மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினர்.

சலுகைநுழைவு தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெறுவோருக்கு கல்விக்கட்டணத்தில் சலுகை தரப்படுகிறது. முதல் பட்டதாரி மற்றும் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தோருக்கும் சலுகை வழங்கப்படுகிறது. சுற்றுப்புற கிராம மாணவர்களை படிக்க வைத்து ஜெர்மனி, ஜப்பான் நாடுவரை வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்பட்டுள்ளது. பழைய மாணவர்கள் சேப்டர்ஸ் மூலமும் தொடர்பு கொண்டு உதவி புரிகிறார்கள்.

இந்தியாவில் எங்கு இருந்து வந்து சேர்ந்து படித்தாலும் கல்விக்கடன் வழங்க பல வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வங்கிகள் தம் சேவையை பல்கலைக்கழக வளாகத்திலேயே தொடர்ந்து இயக்குவதால் பண பரிவர்த்தனை, கல்விக்கட்டண சலுகை இவற்றில் முதல் நிலையில் உள்ளது. இதனால் அந்தமான், நேபாளம், பூடான் மாணவர்கள் உள்பட இந்தியாவில் அனைத்து மாநில மாணவர்களும் அவரவர்கள் கலாச்சார பண்போடு படிப்பதற்கு உகந்த வகையில் பல்கலைக்கழகம் திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment