21.02.2017, எழும்பூர்: மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகளில், 1,500 வீரர்,
வீராங்கனைகள் பங்கேற்று அசத்தினர்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில், மாநில அளவிலான, 16வது மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகள் நடந்தன. அந்த போட்டிகள், எழும்பூர் நேரு பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், கபடி, சக்கர நாற்காலி கூடைபந்து என, 48
வகையான போட்டிகள் நடந்தன. அதில், 1 முதல், 12 வயது வரை ஒரு பிரிவாகவும், 12 முதல், 18 வரை ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடந்தது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோர், ஒரு பிரிவாகவும் பங்கேற்றனர்.
பார்வையற்றோருக்கு கையுந்து பந்து போட்டி நடந்தது. செவித்திறன் குறைப்பாடு உடையோர், தொழுநோயிலிருந்து குணமடைந்தோர் உள்ளிட்டோரும் போட்டியில் பங்கேற்றனர்.
அதில், மாவட்டந்தோறும் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள், 1,500 பேர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கோப்பைகள் வழங்கப்பட்டன.
இப்போட்டியில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற, 400 வீரர்கள் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment