FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, February 28, 2017

சாதிக்க நினைப்பவர்களுக்கு ஊனம் ஒரு தடையில்லை!

27.02.2017
கேட்கும் திறன் இல்லாமல் பிறந்த ஒருவர், இன்று உலகமே போற்றும் ஒரு சிறந்த ஓவியராக மாறி உள்ளார். அவர் ராமலிங்கம். இவரது 40 வயதில் கண் பார்வையும் பேச்சும் தடைபடத் தொடங்கியது. ஆனாலும் ஓவியக்கலையை அவர் விடவில்லை. இன்று இவரது புகழ் உலகெங்கும் பரவி உள்ளது. குறிப்பாக காது கேளாதோர் மத்தியில் இவர் ஒரு கதாநாயகன். சமீபத்தில் சென்னையில் உள்ள லலித் கலா அகாடமியில் நடை பெற்ற ஓவிய கண்காட்சியில் இவரது ஓவியங்கள் மட்டும் அல்லாமல், இவரைப் போலவே காது கேளாதோர் வரைந்த ஓவியங்களையும், அதைப் பற்றிய குறிப்புகளையும் சொல்ல அந்த ஓவியர்களை அழைத்து பேச வைத்தார் ராமலிங்கம். எப்படி இவரால் அது முடிந்தது? என்று கேட்ட போது, தன்னைப் பற்றியும், தான் எப்படி அந்த ஓவியக் கண்காட்சியைச் சிறப்பாக நடத்த முடிந்தது என்றும் கூறுகிறார் ராமலிங்கம், அவரது மனைவி லதாவின் உதவியுடன்.

"நான் பிறந்தது முதலே காது கேளாமல் தான் இருந்தேன். எனது அத்தை மகன் கமல தியாகராஜன் ஓவியங்களை வரைவார். நானும் அவரைப் பார்த்து வரைய ஆரம்பித்தேன். என் ஓவிய ஆர்வத்தைப் பார்த்த எனது தந்தை, நான் எஸ்.எஸ்.எல்.சி. முடிந்தவுடன் என்னை சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்த்தார். அன்று ஆரம்பித்த இந்த ஓவியம் வரைவது, இன்று வரை தொடர்கிறது.

எனது வண்ண ஓவியம் முதன் முதலில் ஒரு வெளிநாட்டுப் போட்டிக்குச் சென்றது, காமன் வெல்த் விருதுக்குத்தான். அந்த விருது எனது 26 -ஆவது வயதில் கிடைத்தது. அதன் பிறகு எனக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. அவற்றில் மிக முக்கியமான விருதுகள் என்று பார்த்தால் அவை சார்லஸ் வாலஸ் டிரஸ்ட் (Charles Wallace Trust, UK) யு.கே, இந்த விருது எனக்கு இரண்டு முறை கிடைத்தது, 1995, 2000. அடுத்தது அமெரிக்காவில் உள்ள போலாக்-க்ராஸ்னர் பெளண்டேஷன் (Pollock Krasner Foundation), அளித்த விருது. இது 2000 -ஆம் ஆண்டு கிடைத்தது. பின்னர் யுனெஸ்கோ (UNESCO Aschberg Bursary) விருது 2005 -இல் கிடைத்தது. அதற்கு பிறகு 2009-இல் ஜப்பான் பெளண்டேஷன் (Japan Foundation) விருது வந்தது. ஸ்பெயின் நாட்டின் (Can Serrat) விருது 2010 -ஆம் ஆண்டில் கிடைத்தது. நம் நாட்டின் தேசிய விருது (National Award for the outstanding Creative Adult Persons with Disabilities) 2012 -ஆம் ஆண்டு கிடைக்கப் பெற்றேன்.

ஒவ்வொரு முறையும் வெளிநாட்டிலேயே எங்களைப்போன்றவர்களின் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது. நமது சென்னையில் ஏன் நடத்தக் கூடாது என்று சிலவருடங்களுக்கு முன் தோன்றியது. அந்த நினைப்பை செயலாக்க என்னைப் போன்ற மக்களிடம் பேச ஆரம்பித்தேன். சிலசமயம் வெப்-கேமரா மூலமும், சில சமயம் இ மெயில் மூலமும் என் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டேன். சுமார் பத்து பேர்களிடம் பேசிய பின் அதில் மூன்று பேர் வர சம்மதித்தனர். அவர்களுக்கு நான் கூறியதெல்லாம், "எங்கள் நாட்டிற்கு வாருங்கள். பழமையான கோவில்களும், சிறந்த முறையில் பராமரிக்கப்படும் இயற்கை எழிலும் உங்களைக் கொள்ளை கொள்ளும்'' என்பதுதான்.

அதில் சீனாவில் இருந்து முஸியாயமெய் (Mu Xiaomei) என்ற பெண்மணியும், ஷி ஜிங்கியாங் (Shi Jingyang) என்ற ஆண் ஓவியரும், தென் கொரியாவில் இருந்து கிம், கியோ - சேங் (Kim, Kyo- Saeng) என்ற ஆண் ஓவியரும் வந்தனர். இவர்கள் அனைவரும் என்னை போலவே காது கேளாதவர்கள் தான். அவர்களது ஓவியங்களும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டன. நமது நாட்டை பற்றியும் அதிலும் குறிப்பாக நமது சென்னையைப் பற்றியும் அதன் கலாசார, பாரம்பரிய, இயற்கை எழிலையும் பார்த்து மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல், என்னையும், என் குடும்பத்தையும் பார்த்து நன்றி கூறியதோடு, சந்தோஷமும் அடைந்தனர்.

என்னைப் பொருத்தவரை என் மனைவி லதா தான் இதுவரை என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர். அவர் எல்லாரையும் போல் சாதாரணமாக இருப்பவர். நான் இப்படி இருக்கிறேன் என்று தெரிந்தும் என்னை மணந்தவர். எனக்கு இரு குழந்தைகள். நான் சமீபத்தில் தான் தேசியமயமாக்கப்பட்ட வங்கிப்பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். என்னைப் பொருத்தவரை எந்த உடல் ஊனமும் சாதனைக்குத் தடையில்லை என்றுதான் கூறுவேன்'' என்றார் ராமலிங்கம். அவரது மனைவி லதாவும் தனது கணவர் சிரிப்பில் பங்கு கொண்டு புன்னைகைத்தார்.

No comments:

Post a Comment