![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfvi_GirdkZwAanH2Vs8g3Iu8R-_5PkxhVEqJZln73_XhsAI_xLZKY07-rlcU0bUQhL_TRCPiIzxVk_8hikZoeBkjGxNYKiAOMAYECZo1hzkQYX5wy74w_T8mXgm9qNWX4iECHpsERqf5a/s400/nisaptham.jpg)
18.02.2017
மாற்றுத்திறனாளி அபிநயா, உண்மையான மாற்றுத் திறனாளியுடன் நடித்த படம்தான் ‘நிசப்தம்’.
மாற்றுத்திறனாளி அபிநயா ‘நாடோடிகள்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இவரை அறிமுகப்படுத்தியது நடிகரும், இயக்குனருமான சசிகுமார். நடிகை அபிநயா வாய் பேச முடியாத காது கேளாதவர். ‘நடித்தால், நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன்’ என்ற முடிவுடன் தற்போது இருந்து வருகிறார்.
சசிகுமார் படங்களில் நடித்த அபிநயா, இதுவரை இரண்டாவது ஹீரோயினாகவே நடித்து வந்தார். தற்போது இவர், ‘நிசப்தம்’ என்ற படத்தில், ஹீரோயினாக, அதுவும், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் , இவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் கன்னட நடிகர் துருவா. இவரும் அபிநயாவைப் போல உண்மையில் வாய்பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment