FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, February 20, 2017

கரவோசையை தன்வசப்படுத்திய காதுகேளாத மாணவர்கள்!

17.02.2017 கோவை:
கோவை மாவட்ட காதுகேளாதோர் சங்கம் மற்றும் லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் (மாவட்டம், 324 - பி5) சார்பில், நேற்று நடந்த மாவட்ட அளவிலான காதுகேளாதோர் விளையாட்டு போட்டி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்த போட்டியில், அரசு, அரசு உதவிபெறும் நான்கு பள்ளிகள் மற்றும் ஒரு தனியார் கல்லுாரியை சேர்ந்த, 30 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஜூனியர், சப் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 50 மீ., 100, 200, 400, 800, 4*100 மீ., தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் உட்பட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன.

ஜூனியர் பிரிவில் ஆண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில், ராஜவீதி டி.இ.எல்.சி., பள்ளி மாணவர் சாதிக் அலி முதலிடமும், காரமடை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் கார்த்திக் இரண்டாமிடமும், டி.இ.எல்.சி., பள்ளி மாணவர் விக்னேஸ் மூன்றாம் இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.அதேபோல், ஜூனியர் பிரிவு பெண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில், காரமடை அரசுப் பள்ளி மாணவி கோபிகா முதலிடமும், மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ., நடுநிலைப் பள்ளி மாணவி அப்ரஸ் சாலிகா இரண்டாமிடமும், டி.இ.எல்.சி., பள்ளி மாணவி சவுபர்னிகா மூன்றாமிடமும் பிடித்தனர்.
சூப்பர் சீனியர் பிரிவு ஆண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில், சங்கரா கல்லுாரி மாணவர்கள் மார்சல், திலீபன், பாஸ்டின் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அதேபோல், பெண்களுக்கான, 100 மீ., ஓட்டத்தில் சங்கரா கல்லுாரி மாணவியர், தனலட்சுமி, சேன்பியா, பிரியங்கா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடந்தது. முன்னதாக, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை துணைவேந்தர் பிரேமாவதி விஜயன் போட்டிகளை துவக்கி வைத்தார். 

கோவை செசயர் ஹோம்ஸ் செயலாளர் தனலட்சுமி, காதுகேளாதோர் சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன், துணைத் தலைவர் வெங்கடேசன், பொது செயலாளர் சுந்தரராஜன், போட்டி நடுவர்களாக ஜி.சி.டி., மாணவர்கள் சக்திவேல், ராஜேஸ்குமார், சுரேந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment