FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, February 28, 2017

உயிரிழந்த காதுகேளாத பெண்ணின் சடலத்தை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வந்த சோகச் சம்பவம்


பெங்களூரு: பெங்களூரு அருகே ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டதால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த காதுகேளாத பெண்ணின் சடலத்தை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெங்களூரில் இருந்து சுமார் 150கி.மீ தொலைவில், மதுகிரி பகுதியில் உள்ள வீரபுராவில் வசித்து வரும் ரத்னம்மா(20), கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வீரபுராவில் இருந்து 6 கி.மீ தொலைவிற்கு ரத்னம்மாவை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கொடிகெனஹள்ளியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அவரது தந்தை திம்மாப்பா அழைத்துச் சென்றுள்ளார்.

சாதாரண பூ வியாபாரியாக உள்ள திம்மப்பா மருத்துவ செலவிற்கு வெறும் ரூ.150 மட்டுமே வைத்துள்ளார். சனிக்கிழமை காலை கடுமையான காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டிருந்த ரத்னம்மாவுக்கு கொடிகெனஹள்ளி சுகாதார மையத்தில் மருந்து மாத்திரைக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

ஆனால், அன்று மாலை தன்னால் முடியவில்லை என்று ரத்னம்மா கூறியதையடுத்து, அருகேயுள்ள தனியார் கிளினிக்கிற்கு திம்மப்பாவும் அவரது மகனும் கொண்டு சென்றனர். ரத்னம்மாவை பரிசோதித்த மருத்துவர் பாபு ஊசி, போட்டு மாத்திரைக் கொடுத்து உடனடியாக மதுகிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் அவர் ஆம்புலன்ஸ் வசதிக்கு ஏற்பாடு செய்துத் தரவில்லை.

இந்நிலையில், இரவு முழுவதும் தூங்க முடியாமல் சிரமப்பட்ட ரத்னம்மாவை மதுகிரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க அவசர ஆம்புலன்ஸ் உதவியை திம்மப்பா நாடியுள்ளார். ஆனால், ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காததால் மீண்டும் ரத்னம்மாவை தனது இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு 6.கி.மீ பயணம் செய்து சுகாதார மையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு செல்வதற்குள் ரத்னம்மா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து சுகாதார மையத்தில் இருந்து ரத்னம்மாவின் உடலை வீட்டிற்குக் கொண்டு செல்ல திம்மப்பா மீண்டும் ஆம்புலன்ஸ் சேவை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அப்போது, இறந்த பிணத்தைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் சேவை தரப்படமாட்டாது என்றுக் கூறி சுகாதார மைய ஊழியர்கள் நிராகரித்துள்ளனர். இதன் காரணமாக சுமார் 6.கி.மீ வரை இறந்துபோன தனது மகளின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், ஆம்புலன்ஸ் தேவைக்காக எவ்வித அழைப்பும் வரப்படவில்லை. எனினும், தனது ஊழியர்களிடம் இது குறித்து விசாரிப்பதாக கூறியுள்ளார். மேலும், திம்மாப்பா தனியார் மருத்துவரை சென்று அணுகியது மிகப் பெரிய குற்றம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று கடந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரது மனைவி உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அவருக்கு ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்ட நிலையில், மனைவியின் உடலை சுமார் 12 கி.மீ., வரை தனது தோளில் சுமந்து கொண்டு சென்றார். இந்த கட்சிகள் ஊடகங்களில் வெளியனாதையடுத்து, அம்மாநில முதல்வரின் உத்தரவுப்படி இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment