சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள காது கேளாதோருக்கான விளையாட்டுப்போட்டியில் கலந்துகொள்ளும் தமிழக வீரர்களுக்கான தேர்வு திருநெல்வேலியில் 2 நாட்கள் நடைபெற்றது.
22.02.2017, திருப்பூர் :
காது கேளாதோருக்கான 21-வது தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் அடுத்த மாதம் (மார்ச்) 28-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள தமிழக வீரர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு போட்டிகள் திருநெல்வேலியில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், மதுரை, ஊட்டி, கிருஷ்ணகிரி, சென்னை உள்பட 17 மாவட்டங்களில் இருந்து 350 வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 31 வீரர்கள் கலந்துகொண்டனர்.
இவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர், 1,600 மீட்டர் தொடர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், கைப்பந்து போன்ற தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்கள் பிரிவில் திருப்பூரை சேர்ந்த சுதிர்ஷ் 5ஆயிரம் மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தங்கப்பதக்கங்கள் வென்றார்.
பெண்கள் பிரிவில் சூர்யா 800 மீட்டர், 400 மீட்டர் ஓட்டத்திலும், ரத்தினம் குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றனர். திருப்பூர் அணி 122 புள்ளிகள் பெற்று முதலிடமும், கைப்பந்து போட்டியில் திருப்பூர் பெண்கள் அணி முதலிடமும் பெற்றுள்ளது. இந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 12 ஆண்களும், 15 பெண்களும் என்று மொத்தம் 27 பேர் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment