18.02.2017, சிவகாசி;
மும்பையில் நடந்த தேசிய 'சைலன்ட் ஒலிம்பிக்-2017' போட்டியில், சிவகாசி செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட 27 பதக்கங்களை பெற்றனர்.மும்பையில் செவித்திறன் குறையுடையோர் மாணவர்கள் பங்கேற்ற தேசிய அளவிலான 'சைலண்ட் ஒலிம்பிக்-2017' விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் இந்தியாவில் உள்ள காதுகேளாதோர் பள்ளிகளில் இருந்து 500 பேர் பங்கேற்றனர். சிவகாசி செவித்திறன் குறையுடையோர் உயர்நிலை பள்ளி மாணவ, மாணவியர்கள் 34 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் 13 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என 27 பதக்கங்களை வென்றுள்ளனர்.
100 மீ., மற்றும் 200 மீ.,ஓட்டத்தில் ராக்கப்பன் தங்கம் வென்றார். 11 வயது பிரிவு 100 மீ., ஓட்டத்தில் அருள்ராஜ் முதல் இடம், அபிஷேக் குமரன் மற்றும் தினேஷ் செஸ் விளை யாட்டு போட்டியில் முதல் இடம், பெண்கள் பிரிவில் லெமன் ஸ்பூன் போட்டியில் கோகிலாதேவி முதல் இடம் பெற்றனர். தனலெட்சுமி 200 மீ., நீளம் தாண்டுதல், தொடரோட்டப் போட்டிகளில் மூன்று தங்கம் வென்றார்.
தொடரோட்டத்தில் தர்ஷினி, முத்துமாரி, மாரிச்செல்வி, தனலெட்சுமி தங்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் சாலமோன், தலைமை ஆசிரியர் பால்ராஜ் பாராட்டினர். உடற்கல்வி ஆசிரியர்கள் கிறிஸ்டோபர், பரிபூரணம் ,ஆசிரியர்கள் ஆபிரகாம், அன்புஜோதிமணி ஆகியோரை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர். விடுதி காப்பாளர் எஸ்தர் கஸ்துாரி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment