01.08.2017
காது கேளாதோருக்கான ஒலிம்பிக் தொடரில் 5 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் இன்று நாடு திரும்பினர்.
காது கேளாதோருக்கான ஒலிம்பிக் தொடர் துருக்கியில் கடந்த 18 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 97 நாடுகளிலிருந்து மூன்றாயிரத்து 145 வீரர்கள், 219 வகையான பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் 29 வீரர்கள் பங்கேற்றனர். தொடரில் மற்ற நாட்டு வீரர்களுடன் போட்டியிட்ட இந்திய வீரர்கள் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றனர். தொடரை முடித்து இன்று காலை இந்திய வீரர்கள் நாடு திரும்பினர். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த வீரர்கள் மனவேதனை அடைந்தனர். பதக்கம் வென்று நாடு திரும்பிய தங்களை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் வரவேற்கவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

No comments:
Post a Comment