FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Tuesday, August 22, 2017

உதவித்தொகைக்கு விண்ணப்பிப்போர் பட்டியலை வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க அரசு உத்தரவு


சமூகப்பாதுகாப்பு திட்டத்தின்கீழ் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை வழங்குவதில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களை தடுப்பதற்கு மாற்றுத்திறனாளி சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் தமிழக அரசின் சார்பில் இன்று சென்னையில் நடைபெற்றது.

தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் கே. சத்யகோபால்,இஆப அவர்கள் தலைமையில் எழிலகத்தில் இன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் திரு.ஆஷிஷ் குமார்,இஆப, சமூகப் பாதுகாப்புத்திட்ட இயக்குநர் திருமிகு சுதா தேவி,இஆப உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அனைத்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் ஜான்ஸிராணி, பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் உள்ளிட்டோரும், டிசம்பர்-3 இயக்கத்தின் சார்பில் தலைவர் தீபக், தேசிய பார்வையற்றோர் இணைய இயக்குநர் மனோகரன், தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஜமால் அலி உள்ளிட்ட மாற்றுத்திறனாளி சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கடந்த ஆக-10 அன்று தலைமை செயலகத்தில் சமூகநலத்துறை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக அரசின் சார்பில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதில் மாநிலம் முழுவதும் உள்ள இடற்பாடுகளை தடுக்க மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இத்தகைய கலந்தாய்வு கூட்டங்களை வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் நடத்தவும் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவித்தொகைக்காக விண்ணப்பிப்போர் பட்டியலை மக்கள் பார்வைக்கு வைக்கவும், மாவட்ட அரசு இணையதளங்களில் ஆன்லைனில் மாதந்தோறும் வெளியிடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்தார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு ஆக-18 தேதியிட்டு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு குறித்த கூடுதல் விபரம் பின்வருமாறு.

வட்டாட்சியர் அலுவலகங்களில் உதவித்தொகைக்காக விண்ணப்பிப்போரை வரிசைப்படி ஆவணத்தில் பதிவு செய்வதும், கண்டிப்பாக சீனியாரிட்டி அடிப்படையிலேயே உதவித்தொகைக்கான உத்தரவு வழங்க வேண்டும். மன நிலை பாதித்தோர், பார்வையற்றோர், வாய் பேசாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி பிரிவினர் இதுவரை விண்ணப்பித்து உதவித்தொகை வழங்கப்படாதவர்களின் படிவங்களை பரிசீலித்து உதவித்தொகை வழங்க வேண்டும். என்பன போன்ற உத்தரவுகள் வருவாய் நிர்வாக ஆணையரின் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment