FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Tuesday, August 1, 2017

செம ஃபிட்டாக இருந்த இளம் நடிகர் த்ருவ் சர்மா திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

01.08.2017 பெங்களூர்: கன்னட நடிகர் த்ருவ் சர்மா திடீர் என்று மரணம் அடைந்துள்ளார். பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபரும், நடிகருமான சுரேஷ் சர்மாவின் மகன் த்ருவ் சர்மா. காது கேளாத, வாய் பேச முடியாத அவருக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது ஆர்வம் அதிகம். அவர் கன்னட படங்களில் நடித்துள்ளார்.

த்ருவ் 
கடந்த சனிக்கிழமை த்ருவ் திடீர் என்று மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் பல உறுப்புகள் செயல் இழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மரணம் 
மருத்துவமனையில் இருந்த த்ருவ் இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.


சிசிஎல் 
திரையுலக பிரபலங்கள் விளையாடும் சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் கிச்சா சுதீப் தலைமையிலான கர்நாடகா புல்டோஸர்ஸ் அணியில் விளையாடியவர் த்ருவ்.

பாராட்டு 
த்ருவ் கர்நாடகா புல்டோஸர்ஸ் அணியில் சிறப்பாக விளையாடக் கூடியவர். தனது குறைகளை பற்றிக் கவலைப்படாமல் வாழ்ந்த த்ருவ் ஃபிட்டாக இருந்தவர். இப்படி திடீர் என்று அவர் மரணம் அடைந்துள்ளது கன்னட திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

No comments:

Post a Comment