FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, August 25, 2017

கணவர் வெறிச்செயல்: மாற்றுத்திறனாளி இரும்பு கம்பியால் அடித்து கொலை

24.08.2017
ஓசூர்: மாற்றுத்திறனாளி சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான சியாமளா என்ற மாற்றுத்திறனாளி பெண் அவரது கணவனால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

ஓசூர் சீதாராம்நகர் பகுதியை சேர்ந்தவர் சியாமளா. இவரது கணவர் நஞ்சுண்டசாமி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

மாற்றுத்திறனாளியான சியாமளா தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் தலைவராக இருந்தார்.

சியாமளாவிற்கும் அவரது கணவர் நஞ்சுண்டசாமிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நஞ்சுண்டசாமி சியாமளாவை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சியாமளாவை அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அவர் சிசிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், மனைவியை கொலை செய்த நஞ்சுண்டசாமியை கைது செய்தனர்.

இதனிடைய, இந்த சம்பவத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment