FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Friday, October 20, 2017

19 வயது மாணவன் பிரித்தானியாவின் இளம் கோடீஸ்வரரானார்..

18.10.2017
ரியல் எஸ்டேட் வியாபாரம் மூலம் அதிக லாபம் ஈட்டியதால் 19 வயது இளைஞர், இங்கிலாந்தின் இளம் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.

லண்டனை சேர்ந்தவர் 19 வயதான இந்திய வம்சாவளியான அக்ஷய் ரூபரேலியா பாடசாலையில் கல்வி பயின்று வருகின்ற நிலையில் தற்போது இவர் இங்கிலாந்தில் உள்ள இளம் வயது கோடீசுவரர்களில் ஒருவர் ஆகியுள்ளார். பாடசாலையில் கல்வி கற்றுக் கோண்டே இணையம் மூலம் இவர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வருகின்றார். இதன்மூலம் அவர் ஒரு வருடத்தில் 100 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான வியாபாரம் செய்து 1.3 மில்லியன் பவுண்ட்ஸ் லாபம் ஈட்டியுள்ளார்.

கடந்த 16 மாதங்களுக்கு முன்பு உறவினர்களிடம் 7 ஆயிரம் பவுண்ட்ஸ் கடன் பெற்று தனது வியாபாரத்தை ஆரம்பத்திருந்த இவரிடம் தற்போது 12 பேர் வேலை செய்கின்றனர்.

காது கேளாத இவரது தாய் மற்றும் தந்தையும் தங்களது மகன் குறித்து பெருமைப்படுகின்றனர். பொருளாதாரம் மற்றும் கணக்கு பாடம் பயில ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு இடம் வழங்க முடிவு செய்துள்ளது. எனினும் அதில் சேர்ந்து படிப்பது குறித்து அவர் முடிவு செய்யவில்லை எனவும் தனது வியாபாரத்தை மேலும் வளர்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது இவரது ரியல் எஸ்டேட் நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள பெரிய கம்பெனிகளில் 18-வது இடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment