FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, October 20, 2017

கேட்க முடியாத கைதட்டல்களைப் பார்த்து ரசிக்கும் மேடை கலைஞர்

15.10.2017
பிறந்தது முதல் காது கேட்காத இந்த மேடைக் கலைஞருக்கு ரசிகர்களின் கைதட்டலைப் பார்ப்பதே மிகப் பெரிய வரன்.

நான்கு வயதில் பெற்றோருடனும் அக்காவுடனும் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார் ரமேஷ் மெய்யப்பன்.
ரமேஷின் பெற்றோருக்கு அது சுலபமான ஒரு முடிவல்ல..

குழந்தைகளில் ஒன்றை இந்தியாவில் விட்டு பிரிந்துவரவேண்டிய சூழல்.

எனினும் கடல் கடந்து வர வேண்டிய கட்டாயம்.

சிங்கப்பூரில் கேட்கும் திறன் குறைந்தோருக்கான பள்ளியில் ரமேஷையும் அக்காவையும் அவர்களின் பெற்றோர் சேர்த்துவிட்டனர்.

தமிழ் மொழி மட்டுமே தெரிந்த பெற்றோரிடம் தமது தேவைகளைப் புரிய வைப்பது ரமேஷுக்கு ஒரு சவாலாக இருந்தது.

இருதரப்புக்கும் இடையில் பாலமாக இருந்தது அவரின் அக்கா. பின்னர் நோயின் காரணமாக அக்காவுக்கும் செவிபுலன் பிரச்சினை ஏற்பட்டது.

எனினும் தமது பிள்ளை பருவம் குறித்து குறையேதும் இல்லை என்றார் 43 வயதாகும் ரமேஷ்.

வீட்டை நன்கு பராமரித்துக்கொண்ட அம்மா.

லிட்டில் இந்தியாவில் கடை வைத்திருந்த அப்பா.

கண்ட கனவை நினைவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியது ரமேஷின் வாழ்க்கையை மலரச் செய்தது.

பீஷான் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நடிப்புத் திறனை வெளிகாட்டத் தொடங்கினார் ரமேஷ்.

23 வயதில் அந்தத் துறையில் முழுநேர ஆசிரியரானார்.
மேடை கலையில் ஆர்வம் அதிகரித்தது.

புத்தாக்க முறையில் மேடை நாடகங்களைப் படைக்க வேண்டும் என்ற ஆசை.

உணர்வுகளைப் பாவனையின்வழி வெளிகாட்டுவதில் தனிப்பட்ட மகிழ்ச்சி.

மொழி தேவையில்லை..மேடை இவரின் தனி உலகமாக இருந்தது.
ஆர்வத்தைத் தொடர வெளிநாட்டுக்குச் சென்றார் ரமேஷ்.

தற்போது ஸ்கோட்லந்தில் மனைவி மகள் ஆகியோருடன் வசிக்கும் ரமேஷ் மேடை நாடகங்களிலும் பெரும் பங்கு வகித்துவருகிறார்.

அவ்வப்போது சிங்கப்பூரின் நிகழ்ச்சிகளிலும் கலந்து செல்கிறார் ரமேஷ்.

பொம்மலாட்டம், வசனமில்லா நாடகம், வான்சாகச உடற்பயிற்சி போன்றவை அவரின் மேடை படைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன.

படைப்புகளின் இறுதிவரை ரமேஷால் கேட்க முடியாது என ரசிகர்களுக்குத் தெரியாத வகையிலே பெரும்பாலும் திட்டமிடப்பட்டிருக்கும்.

தமது படைப்பின் அடிப்படையிலேயே தமக்குப் பாராட்டுகள் வரவேண்டும் என்பது ரமேஷின் இலக்கு.

குறையையும் தாண்டி கற்பனை திறனுக்கு மதிப்புகொடுக்க வேண்டும்.
உடற்குறையுள்ள கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிப்பது குறித்து மேலும் சிந்திக்க வேண்டும்.

சவால்கள் இல்லாத வாழ்வில் சுவாரஸ்யம் இல்லை என்பதில் அதிக நம்பிக்கைக் கொண்டுள்ளார் ரமேஷ்.

No comments:

Post a Comment