FLASH NEWS: ரஷியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம் ***** காங்கோவில் நிகழ்ந்த 2 படகு விபத்துகளில் 193 பேர் பலி ***** ரகசியங்கள் தெரிந்துவிடாமல் இருப்பதற்காக நாசாவில் பணிபுரிய சீனர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ***** 50 சதவீத வரி விதிப்பு- இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது’; டிரம்ப் ஒப்புதல் ***** உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்தியது ரஷியா ***** நேபாளத்தில் இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் மீது தாக்குதல்; பலர் காயம் ***** செவ்வாய் கிரகத்தில் உயிர்கள்... முக்கியமான ஆதாரம் கிடைத்துள்ளது’ - நாசா ***** ‘ராமரின் பிறப்பிடம் குறித்து பேசியதால் ஆட்சியை இழந்தேன்’ - நேபாள முன்னாள் பிரதமர் ***** கலவரத்திற்கு மத்தியில் நேபாள சிறைகளில் இருந்து 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம் ***** இணையத்தை ஆக்கிரமித்த ஜெமினி ஏ.ஐ.யின் புதிய டிரெண்ட் புகைப்படங்கள்..! *****

Tuesday, April 24, 2018

வழிதவறிச் சென்ற 3 வயது சிறுமிக்கு..!! துணையாக நின்ற காதுகேளாத..!! வளர்ப்பு நாயின் பாசம்..!!


ஆஸ்திரேலியாவில், வழிதவறிச் சென்ற 3 வயது சிறுமிக்கு துணையாக நின்று, பாதுகாத்த வளர்ப்பு நாயின் விசுவாசம், நெகிழச் செய்வதாக உள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் Cherry Gully பகுதியை சேர்ந்த, அரோரா என்ற 3 வயது பெண் குழந்தை மாயமானது. மலைப்பாங்கான அப்பகுதியில் குழந்தையை தேடுவதில் மீட்புக்குழுவினருக்கும் உறவினர்களுக்கும் சிரமம் ஏற்பட்டது.

எனினும், வசிப்பிடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில், குழந்தை அரோரா, லேசான காயங்களுடன் மீட்கப்பட்டது. குழந்தையுடன் மேக்ஸ் என்ற வயதான, காதுகேளாத நாய், 15 மணி நேரத்துக்கும் மேலாக துணையாக இருந்து பாதுகாத்துள்ளது.

நன்றியுணர்வோடு குழந்தையை காத்த மேக்ஸின் செயல், பலரையும் நெகிழச் செய்துள்ளது. Queensland போலீஸார் தங்களது முகநூல் பக்கத்தில் நாய் மேக்ஸின் படத்தை பதிவுட்டு புகழாரம் சூட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment