22.04.2018
சென்னை,பாலியல் வன்கொடுமையால் பெண்கள், சிறுமிகள் பாதிக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு, தமிழ்நாடு காது கேளாத மகளிர் சங்கம், தமிழ்நாடு காது கேளாத விளையாட்டுத்துறை கவுன்சில், டெப் என்பிலேடு பவுண்டேஷன் சார்பில் சென்னையில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடந்தது.
எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம், அதே சாலையில் உள்ள தீயணைப்பு அலுவலகம் வரை சென்று திரும்பியது. சங்க நிர்வாகிகள் ஜமால் அலி, சுவாமிநாதன் தலைமை தாங்கினர். காயத்ரி, பெரோஸ்கான், சந்தோஷ்குமார், சக்திவேல், பாலா உள்பட காதுகேளாதோர், வாய்பேச முடியாதோர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சங்கத்தின் சைகை மொழிபெயர்ப்பாளர் வினோத் கூறுகையில், பாலியல் வன்கொடுமை போன்ற இழிவான செயலை முற்றிலும் தடுக்க அரசு கடுமையான சட்டம் கொண்டு வந்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. கடும் நடவடிக்கைகள் வெளிப்படை தன்மையுடன் எடுக்கப்பட்டால், மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். அரபு நாடுகளில் இத்தகைய குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தண்டிக்கப்படுகிறார்கள். எனவே சமுதாய மற்றும் தேச நலன் கருதி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment