21.04.2018
இந்துார்: 'பாக்.,கில் இருந்து வந்த, இந்திய இளம் பெண் கீதாவை திருமணம் செய்பவருக்கு, அரசு வேலை, வீடு வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்ததையடுத்து, 20க்கும் மேற்பட்டோர் தங்கள், சுய விபரங்களை அனுப்பியுள்ளனர்.
இந்தியாவைச் சசேர்ந்தவர், கீதா. காது கேளாத, வாய் பேச முடியாத இவர், தன், 9வது வயதில், பெற்றோரை பிரிந்தார். பாகிஸ்தானுக்கு செல் லும், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறுத லாக ஏறி, லாகூருக்குச் சென்றார். அங்கு, தன்னார்வலர் ஒருவர், கீதாவை தத்தெடுத்து வளர்த்தார்.வெளியுறவு துறை அமைச்சரும்,
பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷ்மா சுவராஜின் உதவியால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், கீதா, இந்தியா வந்தார்.
அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உதவியுடன், இந்தியாவில் வசிக்கும், தன்பெற்றோரை தேடி வருகிறார்.எழுத்து பயிற்சி தற்போது, 24 வயதாகும் கீதா, மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் உள்ள, ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ளார். அங்கு அவருக்கு, எழுத, படிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெற்றோரை கண்டுபிடிக்க முடியாத தால், மன அழுத்தத்தில் உள்ள கீதாவுக்கு, திருமணம் செய்ய, அமைச்சர் சுஷ்மா முடிவு செய்தார்.
இது குறித்து, 'பேஸ்புக்' சமூக வலைத்தளத்தில், அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், கீதாவை திருமணம்செய்பவருக்கு, அரசு வேலை, வீடு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கீதாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பு, தற்போது, அவர் தங்கியுள்ள ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி, ஞானேந்திர புரோஹித்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
20 பேர் விருப்பம்:
இது குறித்து, புரோஹித் கூறியதாவது:' பேஸ்புக்'கில் வெளியான தகவல்களை பார்த்து, 20 பேர், தங்கள் சுய விபரங்களை அனுப்பிஉள்ளனர். அவர்களில், இரண்டு பேரை தவிர, மற்றவர் கள், காது கேளாத, வாய் பேச முடியாத இளைஞர்கள். இந்த விபரங்கள், மத்திய அமைச்சர் சுஷ்மாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கீதாவின் விருப்பப்படி தான், திருமணம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment