14.03.2019
நாமக்கல் : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. நாமக்கல் தொகுதியில் 13 லட்சத்து 77 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். கை, கால் ஊனம், கண் பார்வையற்றவர்கள், காது கேளாதோர், வாய் பேச முடியா தோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு, தொழு நோய் பாதிப்பு மற்றும் குள்ளத்தன்மையுடன் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளும் வாக்களிக்க வசதியாக இந்திய தேர்தல் ஆணையம் தேவையான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, ‘பெர்சன் வித் டிசைபல்’ என்ற புதிய வகை செயலியை (ஆப்) தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு போனில் பதிவிறக்க வேண்டும். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து, தங்களது தேவைகளை பதிவிட வேண்டும். பதிவு செய்யப்பட்டவுடன் பதிவு ஏற்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைக்கும். இந்த ஆதாரத்தை பயன்படுத்தி தேர்தல் சமயத்தில் சக்கர நாற்காலி உள்ளிட்ட தங்களுக்கு பயன்பட கூடிய பொருட்களை கேட்டுப் பெற முடியும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் பிரச்னை என்றாலும் இதில் புகார் பதிவு செய்யலாம். பதிவிட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
No comments:
Post a Comment