FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, March 16, 2019

இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்!' - ஃபரீனா ஆசாத்

13.03.2019
சன் டிவி-யில் ஒளிபரப்பான 'கிச்சன் கலாட்டா' சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர், ஃபரீனா ஆசாத். அதன் பிறகு, ஜி தமிழில் 'அஞ்சறைப் பெட்டி' என்கிற சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருபவருக்கு அடித்திருக்கிறது ஒரு ஜாக்பாட். என்னன்னு கேட்கிறீர்களா..? நம்ம ஃபரீனா இப்போது கலர்ஸ் டி.வி-யில் ஒளிபரப்பாகவிருக்கும் சீரியல் ஷூட்டிங்கில் படு பிஸிங்க.

வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி ஒளிபரப்பாகவிருக்கும், 'தறி' என்கிற சீரியலில் காதுகேளா, வாய்பேச முடியாத பெண்ணாக நடிக்கிறார். இதற்காக ,காதுகேளாத, வாய்ப்பேச முடியாத குழந்தைகள் இருக்கும் பள்ளிகளுக்குச் சென்று, எப்படி சைன் லாங்குவேஜில் பேசுவது என பிராக்டீஸ் எடுக்கிறார்.

இந்த சீரியலில் நடித்த அனுபவம்குறித்து கேட்டபோது, 'காது கேளாத, வாய் பேச முடியாதவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறுபட்டது. அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வது மிக மிக அவசியமான ஒன்று. அவர்களைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கு. அதனால்தான் இந்த சீரியலில் நானும் காது கேளாத, வாய் பேச முடியாத பெண்ணாக நடிக்கிறேன். அதனால், அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களுக்குச் சென்று, அதற்கான பயிற்சியைப் பெற்றுவருகிறேன். அவர்களுடைய உலகம் எப்படி இருக்கிறது என்பதை என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. நிறையப் பேர், 'உங்களுக்கு சைன் லாங்குவேஜ் காட்டி நடிப்பது கஷ்டமாக இல்லையா' எனக் கேட்கிறார்கள். இல்லவே இல்லைனுதான் பதில் சொல்வேன். இந்த கதாபாத்திரத்தை ரசித்துச் செய்கிறேன்' என்கிறார். 

'தறி' சீரியல், முழுக்க முழுக்க நெசவாளர்களின் கதையை மையமாகக் கொண்டதாம். புது முகங்களான சபரி மற்றும் ஶ்ரீ இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். தறி நெய்யும் நெசவாளர்களின் வாழ்க்கை இப்போது எப்படி இருக்கிறது... இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு, தந்தை எப்படி கஷ்டப்படுகிறார் எனப் பல விஷயங்களைப் பேசுகிறது இந்த சீரியல்.

No comments:

Post a Comment