FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, March 16, 2019

மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்

13.03.2019
ராமநாதபுரம்:மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெறுவதற்குதகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.கை, கால்ஊனமுற்றமற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தாய்மார்களுக்கு குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது.இதன்படி18 வயது முதல் 45 வயது வரை உள்ள கை, கால் பாதிக்கப்பட்ட காது கேளாத, மிதமானமனவளர்ச்சி குன்றிய மற்றும் 75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களும் இந்த திட்டத்தில் தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தைப் பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்,என கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment