FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, March 16, 2019

62 ஆண்டுகளாக காது கேளாதவராக நடித்த கணவர்

08.03.2019
வாஷிங்டன்: அமெரிக்காவில் மனைவியின் டார்ச்சரிலிருந்து தப்பிக்க, 62 ஆண்டுகளாக காது கேளாதவர் போல் நடித்த கணவர் மீது மனைவி விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியைச் சேர்ந்தவர் பாரி டவ்சன் 84, இவர் மனைவி டோரத்தி 80. திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே மனைவியின் டார்ச்சர் தாங்காமல் காது கேளாதவர் போல் பாரி டவ்சன் நடிக்கத் துவங்கியுள்ளார். இப்படியே 62 ஆண்டுகளை நகர்த்தி விட்ட நிலையில், சமீபத்தில் யூடியூப் வீடியோவில், கரோக்கி இசையை கேட்டு தலையை ஆட்டியபடி பாரி டவ்சன் பாடியுள்ளது சமூக வலைத்தளத்தில் வெளியானது.

அதைப் பார்த்து குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர் என்றாலும், அவர் மனைவியோ காது கேளாதவர் போல் நடித்து தம்மை ஏமாற்றியுள்ளாரே என நினைத்து கடுப்பாகி, விவாகரத்து வழக்கு தொடுத்துள்ளார்.இத்தம்பதிக்கு 6 பிள்ளைகள். 13 பேரன், பேத்திகள் உள்ளனர். அவர்கள் அனைவருமே பாரி டவ்சன்னை காது கேளாதவர் என்றே நினைத்துள்ளனர்.

இதுகுறித்து அவர் மனைவி டோரத்தி கூறியது: வீட்டில் இருக்கும் போதெல்லாம் காது கேளாதவர் போன்றே இருப்பர். அவருடன் பேசுவதற்கு சைகைகளை பயன்படுத்த துவங்கினேன். பின், சரியாக தெரியவில்லை என்று என் சைகைகளையும் அலட்சியப்படுத்தினார். இப்போது தான் தெரிகிறது எல்லாமே ஏமாற்று வேலை என்று' என கடுகடுக்கிறார்.

ஆனால், டவ்சன் வழக்கறிஞர் ராபர்ட் கூறிய போது, 'டவ்சன், தன் மனைவியின் லொட லொட பேச்சு, சண்டையிலிருந்து தன் மனதையும், குடும்ப அமைதியையும் காப்பதற்காக, 62 ஆண்டுகளை தியாகம் செய்துள்ளார்' என்று வாதாடியுள்ளார்.

No comments:

Post a Comment