10.03.2019, திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் பார்வையற்றோர், உடல் இயக்க குறைபாடு, காது கேளாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆண்டு காலத்திற்கான இலவச பயண சலுகை அட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. 2019–20–ம் ஆண்டிற்கான இலவச பயண சலுகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் அரசு பஸ்களில் மாவட்டம் முழுவதும் இலவசமாக பயணம் செய்யவும், உடல் இயக்க குறைபாடுடையோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் தினந்தோறும் பயிற்சி மற்றும் சிகிச்சைக்கு செல்லும் இடத்தில் இருந்து பெறப்பட்ட சான்றுடன் விண்ணப்பிக்கலாம். இலவச பயண சலுகை அட்டை வழங்கிடுவதற்கான சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் நடக்கிறது.
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு ஆகிய பகுதியை சேர்ந்த பார்வையற்றவர்களுக்கு வருகிற 19–ந் தேதியும், ஜமுனாமரத்தூர், போளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு ஆகிய பகுதியை சேர்ந்த பார்வையற்றவர்களுக்கு வருகிற 21–ந் தேதியும், ஆரணி, வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 22–ந் தேதியும் முகாம் நடக்கிறது.
அதேபோல் உடல் இயக்க குறைபாடுடையோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றிய மற்றும் இதர மாற்றுத்திறனாளிகள் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 27–ந் தேதியும், ஜமுனாமரத்தூர், போளூர், கலசபாக்கம், சேத்துப்பட்டு வருகிற 28–ந் தேதியும், ஆரணி, வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி ஆகிய பகுதியை சேர்ந்தவர்களுக்கு வருகிற 29–ந் தேதியும் நடைபெற உள்ளது.
மேலும் இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

No comments:
Post a Comment