FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, October 21, 2019

காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டி ;சந்தீப் நந்தூரி,துவக்கி வைத்தார்.


19.10.2019, தூத்துக்குடி 2019 அக்டோபர் 19 ; தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில், காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு காதுகேளாதோர் விளையாட்டு அமைப்பு சென்னை, தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கம் இணைந்து நடத்தும் காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டி துவக்க விழா இன்று (18.10.2019) நடைபெற்றது. இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கலந்து கொண்டு, காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கான மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தார். மேலும், காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்ததாவது:- 

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் சங்கம் சார்பாக மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறுகின்ற பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளில் 16 மாவட்டங்களில் இருந்து காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத 200 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும், மாணவ, மாணவியர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுவார்கள். காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவ, மாணவியர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு நற்சான்றிதழ்கள் மற்றும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. நமது மாவட்ட நிர்வாகத்தின் மூலம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 10 மாற்றுத்திறனாளிகள் சுயமாக தொழில் செய்யும் வகையில், மாற்றுத்திறனாளிகள் கேன்டீன் செயல்படுகிறது.நேற்று நான் பத்திரிக்கை செய்தி வாசித்த போது, 100 சதவீதம் கண் தெரியாத ஒருவர், இந்திய பணி தேர்வில் வெற்றி பெற்று திருவனந்தபுரம் மாவட்டத்தில், சார் ஆட்சியராக நேற்று பணி பொறுப்பேற்றுள்ளார் என்பதை அறிந்தேன். சார் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், திறமைக்கு எதுவும் தடையில்லை என்பதை நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத குழந்தைகளை பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ,தெரிவித்தார்.இவ்விழாவில், மாவட்ட விளையாட்டு அலுவலர் டி.வி.பேட்ரிக், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மேலாளர் குமரேசன், தொழில் அதிபர் கே.பழனிவேல், நல்லாயன் செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் டேவிட் ஜெயசேகர், தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு அமைப்பு செயலாளர் மெய்கண்டன், தலைவர் காசிவேல் முருகன், உதவி தலைவர் சின்னதுரை, பொருளாளர் ஏ.போஸ்கோ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment