FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Monday, October 21, 2019

பள்ளி மாணவர்களின் மனதில் உள்ள சாதி வெறி ! மாணவன் சுரேந்தரன் ( காது கேட்காத, வாய் பேச முடியாத ) என்ற மாணவரை கடுமையாக தாக்கியுள்ளான்


20.10.2019 
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் ஆதி என்ற மாணவன் சுரேந்தரன் ( காது கேட்காத, வாய் பேச முடியாத ) என்ற மாணவரை கடந்த 17-10-2019-ந்தேதி மாலை நேரத்தில் பள்ளியில் கடுமையாக தாக்கியுள்ளான். பள்ளி முடிந்து வெளியே வந்த சுரேந்தரை ஆதி மற்றும் அவருடைய அண்ணன் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிப்பவர் மற்றும் ஆதியின் உறவினர் கலைமணி ஆகியோர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

தாக்குதலுக்கு சுரேந்திரன் மாணவனின் சித்தப்பாவிடம் கலைமணி என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உன் மகனை அடித்து சக்கராபாளையத்தில் எரித்து விட்டேன் என்று கூறியுள்ளார். மேற்படி மாணவன் சுரேந்தர் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் 4-நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று தகவல் அறிந்து தாக்குதலுக்கு ஆளான மாணவன் சுரேந்திர் அவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு வழக்கு பதிவு செய்ய தமிழ் புலிகள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment