FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Wednesday, June 18, 2025

திருச்சி செவித் திறன் மாற்று திறனாளி மாணவி ராகிணிக்கு முதல்வர் தனது பேனாவை வழங்கி பாராட்டு

கிளாட்’ தேர்வில் வெற்றி பெற்று தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவி ராகிணிக்கு சால்வை அணிவித்து, தனது பேனாவை பரிசாக வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

17.06.2025
திருச்சி: ‘கிளாட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ள திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி ராகிணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேனாவை பரிசளித்து, வாழ்த்து தெரிவித்தார். திருச்சி பெரிய மிளகுப்பாறை பண்டாரத்தெருவைச் சேர்ந்த தயாளன் மகள் ராகிணி. செவித் திறன் மாற்றுத்திறனாளியான ராகிணி, அங்குள்ள ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து, ‘கிளாட்’ நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்துள்ளார்.

ரூ.55 ஆயிரம் மதிப்புடைய பேனா: இந்நிலையில், தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, சென்னை செல்வதற்காக திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரிய மிளகுப்பாறை ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் அந்த மாணவி ராகிணியை சந்தித்து, பொன்னாடை போர்த்தி, ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள தனது பேனாவை பரிசளித்து பாராட்டி, வாழ்த்து கூறினார்.

இதுகுறித்து மாணவி ராகிணி கூறியதாவது: எனது தாய் சிறுவயதிலேயே என்னை விட்டு பிரிந்து சென்றார். எனது தந்தை, பாட்டி, அத்தை ஆகியோர்தான் என்னை வளர்த்தனர். ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் ‘கிளாட்’ தேர்வு குறித்து அறிந்து, அந்த தேர்வை எழுதி வெற்றி பெற்றேன். இந்த வெற்றிக்கு எனது குடும்பத்தினர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்தான் காரணம்.தேசிய சட்டப்பல்கலையில் சேர்ந்த எனக்கு முதல்வர் ஸ்டாலின், தனது பேனாவை பரிசளித்து பாராட்டியது நெகிழ்ச்சியான தருணம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், முதல்வர் ஸ்டாலின், அதே பகுதியில் அண்மையில் மறைந்த முன்னாள் திமுக நகரச் செயலாளர் கே.கே.எம்.தங்கராசு இல்லத்துக்குச் சென்று, அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி. திருச்சி சிவா, மேயர் மு.அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் விமான நிலையம் சென்ற முதல்வர் ஸ்டாலின், பிற்பகலில் சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.


No comments:

Post a Comment