FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Thursday, June 5, 2025

சேலம், செவித்திறன் குறையுடையோர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை


05.06.2025
சேலம், செவித்திறன் குறையுடையோர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:

மாற்றுத்திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில், அரசு செவித்திறன் குறையுடையோர் உயர்நிலை பள்ளி, ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் தங்கும் விடுதியுடன் செயல்படுகிறது. அங்கு, 1 முதல், 10ம் வகுப்பு வரை, நடப்பாண்டு சேர்க்கை நடக்கிறது. இப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவியருக்கு, சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். கணினி திறனை மேம்படுத்த சிறந்த பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படும்.

மாணவ, மாணவியருக்கு தனித்தனியே விடுதி, உணவு, சீருடை, கல்வி உபகரணங்கள், செவித்துணைக்கருவி, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 2024 - 25ம் கல்வியாண்டில் இப்பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

காது கேளாதோர், வாய் பேச இயலாதோர், செவித்திறன் குறைவுடைய குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகள் கல்வி நலனை மேம்படுத்த இந்த பள்ளியில் சேர்க்கலாம். குறிப்பிட்டு, 0427 - 2442067, 94999-33469 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


No comments:

Post a Comment