FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Monday, June 9, 2025

காதுகேளாதோர் பள்ளி சுற்றுச்சுவர் சேதம்



09.06.2025
விருதுநகர்:விருதுநகர் அருகே சூலக்கரையில் உள்ள அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 ஆண்டுகளாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. பலவீனமாக சுவர்கள் விழும் நிலையில் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

சூலக்கரையில் அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் சுற்றுச்சுவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமாகி மழைக்காலத்தில் சிறுபகுதி இடிந்து விழுந்தது. இதையடுத்து பலவீனமாக இருந்த அடுத்தடுத்த சுற்றுச்சுவர்களும் சில நாட்களில் இடிந்தது.

தற்போது மற்ற சுவர்களும் பலவீனமாகவே உள்ளது. இதுவரை இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்கள் பகுதிகளில் புதிதாக சுவர் கட்டப்படவில்லை. இதனால் பள்ளி வளாகத்தில் விஷப்பூச்சிகள், பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஒரு மாதம் கோடை விடுமுறை விட்டு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் சுற்றுச்சுவர்கள் சீரமைக்கப்படவில்லை.

இதனால் மாணவர்கள் அச்சத்துடன் வளாகத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வலுவிழந்த சுவர்கள் மாணவர்கள் மீது விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல முறை உயர்அதிகாரிகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


No comments:

Post a Comment