FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Friday, June 13, 2025

Tech4all 2025: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் புதிய நவீன உபகரணக் கண்காட்சி ஜூன் 12, 13 சென்னையில்!



இக்கண்காட்சிக்கு மறுவாழ்வு மருத்துவர்கள், மறுவாழ்வு பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் கட்டணமில்லா அனுமதியுடன் நேரடியாக சென்று கண்காட்சியில் இடம்பெறும் புதிய தொழில்நுட்பங்களை மதிப்பாய்வு செய்து நேரடியாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

உபகரணங்கள் பற்றிய கண்காட்சி ஜூன் 12, 13 அதாவது, இன்றும் நாளையும் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான அனுமதி இலவசம். கட்டணமில்லை. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசுச் செயலாளர் எஸ்.மதுமதி, கண்காட்சியைத் திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்பட்டு வரும் பாரம்பரிய உதவி உபகரணங்களைத் தவிர, தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் கூடிய புதிய நவீன உதவி உபகரணங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சியாகும் இது.


இந்தக் கண்காட்சி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 12.06.2025 (வியாழக்கிழமை) மற்றும் 13.06.2025 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும். இக்கண்காட்சிக்கு மறுவாழ்வு மருத்துவர்கள், மறுவாழ்வு பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் கட்டணமில்லா அனுமதியுடன் நேரடியாக சென்று கண்காட்சியில் இடம்பெறும் புதிய தொழில்நுட்பங்களை மதிப்பாய்வு செய்து நேரடியாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் வாழ்வாதாரம் அன்றாடம் சகஜமாக நடைபெற, அவர்கள் அன்றாட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை உட்பட இயல்பாக நடைபெற உதவும் புதிய நவீன உபகரணங்கள் அவர்களுக்காக இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தக் கண்காட்சி உதவிகரமாக இருக்கும். கண்காட்சியில் பங்கேற்றுப் பார்வையிட http://www.medicall.in/medical-exibition-registration-online.php என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment