FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Tuesday, June 17, 2025

தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் 2025 - 2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா!





வேலூர், ஜூன்.16-

தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் 2025-2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வா கிகள் பதவி ஏற்பு விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா வேலூர் பில்டர்பெட் ரோட்டில் உள்ள ஆசிரியர் இல்ல கலையரங்கில் நடைபெற்றது விழாவிற்கு வேலூர் மாவட்ட காது கேளாதோர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார் பொதுச் செயலாளர் சுரேஷ் குமார் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சரவணன் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் துணை சேர்மன் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மாநிலத் தலைவராக ஸி.பழனிசாமி துணைத் தலைவராக சிக்கந்தர் மற்றும் பொதுச் செயலாளராக நி ஜெய்சங்கர் பொருளாளராக டென்சிங் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒருவர் செயற்குழு உறுப்பினராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர் இக்கூட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 4% இட ஒதுக்கீடு இன் படி வேலை வழங்குவது உள்ளிட்ட 5 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நிகழ்ச்சியின் நிறைவாக . வேலூர் மாவட்ட காது கேளாதோர் சங்க செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் நன்றியுரையாற்றினார்.



No comments:

Post a Comment