FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, August 6, 2025

2050ம் ஆண்டுக்குள் 250 கோடி நபர்களுக்கு காது கேளாமை பிரச்சனை: எச்சரிக்கும் WHO - தப்பிப்பது எப்படி? - HEARING LOSS SYMPTOMS



காது கேட்கும் திறன் குறைந்து வருவதை ஆரம்ப நிலையிலேயே கவனிக்காதது தான் பாதிப்பை அதிகரிக்க செய்யும்.

2050ம் ஆண்டுக்குள் 250 கோடி நபர் காது கேளாமை பிரச்சனைக்கு ஆளாவார்கள் என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. உலகளவில் அமைதியாக அச்சுறுத்தும் உடல்நல பாத்திப்புகளுள் ஒன்றாக காது கேளாமை (DEAFNESS AND HEARING LOSS ) பிரச்சனை உருவெடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகளவில் 160 கோடி நபர் காது கேளாமை பிரச்சனையை எதிர்கொள்வதாகவும் 10 பேரில் ஒருவருக்கு காது கேட்கும் திறனில் பிரச்சனை இருப்பதாகவும் WHO வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காது கேளாமல் என்றால்? காது கேட்கும் திறன் இழப்பு என்பது ஒலியின் வீரியத்தை அளவிடும் அலகான டெசிபல் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. இயல்பாக கேட்கும் திறன் இரண்டு காதுகளிலும் 20 டெசிபல் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். நான்கு முதல் ஐந்து பேர் கூடி இருக்கும் இடத்தில் ஒருவர் தவிர மற்றவர்களுக்கு பிறர் பேசுவது நன்றாக கேட்கும் நிலை இருந்தால் அந்த நபர் காது கேட்கும் திறனை இழந்து கொண்டிருப்பதாக கணக்கிடப்படும். அவர் பிறர் பேசுவதை புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப லேசானது முதல் கடுமையானது வரை காது கேட்கும் திறனின் குறைபாடு அளவிடப்படும்.



அறிகுறிகள் என்னென்ன? ஒரே நாளில் செவித்திறன் இழப்பு ஏற்படுவதில்லை. காது கேட்கும் திறன் குறைந்து வருவதை ஆரம்ப நிலையிலேயே கவனிக்காதது தான் பாதிப்பை அதிகரிக்க செய்யும். ஆனால், இதனை கூர்ந்து கவனிப்பது கடினமான விஷயமாக இருக்கலாம். இப்படியிருக்க, காது கேளாமையின் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

  • அமைதியான சூழலில் கூட பிறர் பேசுவதை புரிந்து கொள்வதில் சிக்கல்
  • அருகில் இருந்தே ஒருவர் பேசினாலும், அவர் சொன்ன வார்த்தையை திரும்ப சொல்லுமாறு கேட்பது
  • வார்த்தையை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுவது.
இது போன்ற அறிகுறிகளை நீங்கள் எதிர்கொண்டால், அதனை சாதரணமாக கடந்து செல்லாமல் உகந்த சிகிச்சை அளிக்க வேண்டும். கிட்டத்தட்ட 60% காது கேளாமல் பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம் என்கிறது ஆய்வு.

காது கேளாமை ஏற்படக் காரணம்?:
  • அதிக சத்தம்
  • ஹெட்போன் அதிக நேரம் பயன்படுத்துவது
  • நகரப்பகுதியில் நீடிக்கும் இரைச்சல்
  • போக்குவரத்து
  • கட்டுமானம்
  • பொது இடங்களில் எழும் சத்தம்
  • இசை நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் அதீத சத்தம் போன்றவை காதுகளை அழுத்தத்திற்கு ஆளாக்கி காது கேட்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இளைஞர்களுக்கு ஆபத்து? WHO தரவுகளின் படி, 100 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் காது கேளாமைக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளதாக எச்சரித்துள்ளது. 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது காதுகளை பரிசோதனை செய்வது அவசியமாக அமைகிறது.


No comments:

Post a Comment