.jpeg)
ஜகார்த்தா, 22 ஆகஸ்ட் (பெர்னாமா) - 2025 செவித்திறன் குறைபாடு
கொண்டவர்களுக்கான சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா முதல் தங்கத்தை வென்றுள்ளது.
ஜகார்த்தாவின் ரகுனான்மாணவர் விளையாட்டு பயிற்சி மையம் PPOP-இல் நடைபெற்று வரும் இப்போட்டியில் நாட்டின் தேசிய திடல்தட வீரர் அஸ்லான் குஸ்தே மலேசியாவுக்கான அந்த முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
ஆடவருக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அஸ்லான் தங்கம் வென்றுள்ளார்.
2022 கோலாலம்பூர் போட்டியின்போது வெற்றியாளராக வாகை சூடிய அவர், இம்முறை 2 நிமிடங்கள் 03.97 வினாடிகளில் ஓட்டத்தை முடித்து நடப்பு வெற்றியாளர் பட்டத்தை தற்காத்துக்கொண்டுள்ளார்.
இரண்டாம் இடத்தை 2 நிமிடங்கள் 05.21 வினாடிகளில் முடித்து சக வீரரான ஐடில் ஏ. அஷ்ரஃப் ஜுவாக்கிம் மலேசியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
அதேவேளையில், மூன்றாம் இடத்தை பிடித்த புரூணையின் முஹமட் அமிருடின் முஹமட் சைன் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இவ்வாண்டின், செவித்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கான சீ விளையாட்டுப் போட்டி வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை நடைபெறும்.
No comments:
Post a Comment