21.08.2025
கிரேட்டர் கைலாஷ்: வாய் பேச முடியாத நாடோடி கொலை செய்யப்பட்டது தொடர்பாக நால்வரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 13ம் தேதி அதிகாலை, தென்கிழக்கு டில்லியின் ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் நாடோடி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்து வந்தனர். அவர் இஸ்கான் கோவிலுக்கு அருகில் வசித்து வந்த நாடோடி குங்கா என்பதும் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதும் தெரிய வந்தது.
ராஜா திர் மார்க் பகுதியில் உள்ள கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வந்தனர்.
சம்பவம் நடந்த, 13ம் தேதி அதிகாலை 12:40 மணி அளவில் மூன்று பேர் கொண்ட கும்பல், ஆட்டோவில் இருந்து இறங்கி பூங்காவுக்குள் செல்வதை போலீசார் கண்டறிந்தனர். அந்த காட்சிகளின் அடிப்படையில் இரு சிறுவர்கள் உட்பட மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நாடோடி கொலை வழக்கில் துப்பு துலங்கியது.
சம்பவ தினத்தன்று அந்த கும்பலை குங்கா பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த மூவரும், குங்காவிடம் விசாரித்துள்ளனர். அவர் பதில் கூறாததால், ஆத்திரமடைந்து, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்துள்ளார்.
மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலை அடுத்து, இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக ஸ்ரீனிவாஸ்புரியில் வசிக்கும் ரஹானா, 44, என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 175 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:
Post a Comment